தென் தமிழகத்திலும், மேற்கிலும் நல்ல மழைக்கு வாய்ப்பிருக்கு.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்

Nov 02, 2024,03:07 PM IST

சென்னை: தென் தமிழகம் மற்றும் மேற்குத் தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்ய கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 


வடகிழக்கு பருவமழை நவம்பர் ஐந்துக்கு மேல் தீவிரமடையும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது தமிழ்நாட்டில் அனேக இடங்களில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. இன்று மதியம் சென்னை மணலி, திருவெற்றியூர், மாதவரம், வண்ணாரப்பேட்டை, எண்ணூர், மதுராந்தகம், உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக கனமழை கொட்டி தீர்த்தது. அதேபோல்  கருமேகங்கள் சூழ்ந்து மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது.




இதற்கிடையே மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிவரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. 


இந்த நிலையில்  இன்று எங்கெல்லாம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் தினமும் மழை பெய்து வருகிறது. அருமனை- திருவத்தூர் பகுதிகளில் தற்போது கனமழை பெய்தது. தென் தமிழகம் மற்றும் மேற்கு தமிழகம் முழுவதும் இன்று நல்ல மழை பெய்யும். 


கன்னியாகுமரி, தேனி, தென்காசி, நெல்லை, விருதுநகர், திண்டுக்கல், மதுரை, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, நாமக்கல், ஆகிய நகரங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஆகிய வட தமிழகத்தில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளதாக  தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

எதிர்ப்பேன்... ஆதரிப்பேன்... ஆலோசனை சொல்வேன்... எம்.பி., கமல்ஹாசனின் முதல் பதிவு!

news

கமல்ஹாசன்.. களத்தூர் கண்ணம்மா முதல் ராஜ்யசபா வரை!

news

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பிரபலம்... நடிகை இலக்கியாவுக்கு என்னாச்சு?

news

உஷார் மக்களே உஷார்... தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யப்போகுது தெரியுமா?

news

விஜய் சீமானை நேரடியாக அழைக்கவில்லை... எங்களது விருப்பத்தை நாங்கள் சொல்கிறோம்...எடப்பாடி பழனிச்சாமி

news

கமல்ஹாசனின் புதிய அத்தியாயம்.. ராஜ்யசபா உறுப்பினராக தமிழில் பதவியேற்றார்

news

Friday Motivation: மனைவி ஸ்ரீதேவியின் ஆசையை.. 69 வயதில் நிறைவேற்றிய போனி கபூர்

news

ருத்ர தாண்டவம் (சிறுகதை)

news

உரிமை மீட்க தலைமுறை காக்க... திட்டமிட்ட படி இன்று நடைபயணம் தொடங்குகிறார் அன்புமணி ராமதாஸ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்