பாஜக கூட்டணி.. ஓபிஎஸ் முடிவு என்ன.. 11ம் தேதி அவசர ஆலோசனை!

Oct 06, 2023,01:30 PM IST


சென்னை: ஓபிஎஸ் தலைமையிலான "அதிமுக"வின் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அக்டேபர் 11ம் தேதி நடைபெறகிறது.


அதிமுக-பாஜக இடையேயான கூட்டணி குறித்து நிலையான முடிவு எட்டப்படாத நிலையிலேயே உள்ளது.  பாஜகவுடன் நாங்கள் இல்லை என்று ஏற்கனவே அதிமுக அறிவித்து விட்டது. அதை அண்ணாமலை டோன்ட் கேர் என்ற லெவலில்தான் டீல் செய்து வருகிறார். ஆனால் பாஜக மேலிடத்தால் அதிமுகவை கை கழுவ  முடியவில்லை. காரணம், அதிமுக தான் பாஜகவின் முகவரியாக தமிழ்நாட்டில் உள்ளது என்பதால்.




கூட்டணி குறித்து அதிமுக - பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் ரகசியமாகவும் தற்போது பேசி வருகின்றன.   இதை அதிமுக - பாஜக கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். நிலைமை இப்படி இருக்க மறுபக்கம் ஓபிஎஸ் தரப்பும் ஏதாவது ஒன்றை செய்து கொண்டே இருக்கிறது.


அக்கட்சியின் ஆலோசனைக் கூட்டத்தை தற்போது கூட்டியுள்ளனர். கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ச. ராமச்சந்திரன் தலைமையில் ஆகஸ்ட் 11ம் தேதி இக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் எந்த கட்சியில் "அதிமுக" கூட்டணி சேரும் என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிகிறது.


சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் மாலை 5 மணிக்கு நடைபெறுவதாக ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். இவர்கள் பாஜகவுடன் கூட்டணி வைக்கும் முடிவை எடுப்பார்கள் என்று தெரிகிறது. மேலும் இந்த முடிவுடன் டெல்லி சென்று பாஜக தலைர்களை சந்திக்கவும் ஓபிஎஸ் அணி திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்