சென்னை: தமிழ்நாட்டில் அதிகபட்சமாக வெப்பநிலை இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகரிக்க கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவியதால் தமிழ்நாட்டில் கடந்த வாரம் பரவலாக மழை பெய்தது. இதனால், வெயில் குறைந்து குளுமையான சூழல் நிலவியது. இதனைத் தொடர்ந்து தற்போது நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் மிதமான மழை பெய்து வருகிறது. அதே சமயத்தில் தமிழ்நாடு, மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவி வருவதால் மதியம் வேளையில் வெப்ப அலை அதிகமாக இருக்கிறது. மக்கள் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ்நாட்டின் வெயில் நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 29ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவும். அப்போது அதிகபட்ச வெப்பநிலை பொதுவாக இயல்பை ஒட்டியும், ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாகவும் இருக்கக்கூடும்.
மேலும் மார்ச் 27 முதல் 29ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்த வெப்பநிலை ஒரு சில இடங்களில் இயல்பை விட இரண்டு முதல் மூன்று டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடிய நிலையில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும், நாளையும் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 முதல் 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
சிலரோட சுயநலம் தெரிய வரும்போது.. True Colours!
அடுத்த திட்டம் என்ன?...ஆதரவாளர்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜன30ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு.. இதுவரை 12.80 லட்சம் பேர் மனு
கரூர் வழக்கு.. டெல்லி சிபிஐ விசாரணையில் நடப்பது என்ன.. விஜய்யிடம் கேட்கப்படும் கேள்விகள் என்னென்ன?
பஞ்சமி திதியில் வரும் வசந்த பஞ்சமி.. மிக மிக சிறப்பு!
71 மாவட்டங்களுக்கும் தலைவர்கள்.. ஒரு வழியாக அறிவித்தது காங்கிரஸ்!
மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் தெறி ரீ ரிலீஸ்...காரணம் இது தானா?
டைப்ரைட்டிங் கீபோர்டில்.. எழுத்துக்கள் ஏன் மாறி மாறி இருக்கு தெரியுமா?
சித்திரம் பேசுதடி (சிறுகதை)
{{comments.comment}}