வால்பாறைக்கு போயிருப்பீங்க.. இந்த "Whale பாறை"க்கு போயிருக்கீங்களா?

Apr 07, 2023,11:12 AM IST
பாங்காக்:  நம்ம ஊர் வால்பாறைக்கு நிறையப் பேர் போயிருப்போம்.. ஆனால் தாய்லாந்தில் உள்ள "Whale பாறை" பற்றி தெரியுமா.. ரொம்ப சுவாரஸ்யமான சுற்றுலாத்தலம் அது. 

தாய்லாந்தின் Hin Sam Wan எனப்படும் மூன்று திமிங்கலம் பாறை என்பது மிகப் பிரபலமான சுற்றுலாத்தலம். பெயருக்கேற்ப அடர்ந்த காட்டுக்குள் மூன்று திமிங்கலங்கள் வந்தால் எப்படி இருக்குமோ, அதேபோலத்தான் இந்த பிரமாண்டமான நீளமான பாறைகளும் காட்சி தருகின்றன. இதனால்தான் இவற்றுக்கு திமிங்கலப் பாறை என்று பெயர் வந்தது.



75 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான பாறைகள் இவை. இந்த பாறைகளின் உச்சி வரை போகலாம். அதற்கேற்ப பாதைகளை உருவாக்கி வைத்துள்ளனர். பார்க்கவே பிரமிப்பைக் கொடுக்கக் கூடிய இந்த பாறை மீது ஏறிப் பார்க்கும்போது இன்னும் பிரமாண்டமாக இயற்கையைப் பார்த்து ரசிக்கலாம். 

இந்த மலை மீதி ஏறிப் பார்த்தால் மேகாங் கடற்கரை அழகாக காட்சி தரும். அதேபோல லாவோ நாட்டின் பக்காங் மாவட்டத்தின் மலைகளையும் இங்கிருந்து பார்க்க முடியும்.  ஒரு நாள் முழுவதும்இந்த மலை மீது செலவழித்து இயற்கையை ரசித்து மகிழலாம். இந்த மலைகளின் உச்சியை அடைய 9 விதமான வழிகள் உள்ளன. வழியெங்கும் நீர்வீழ்ச்சிகளையும் பார்க்க முடியும்.

முழுக்க முழுக்க அமைதியும், எழில் கொஞ்சும் இயற்கையும் மட்டுமே இந்த மலைப் பகுதியில் உள்ளதால் மனதை மிகவும் ரம்மியமாக மாற்றும் தன்மை இவற்றுக்கு அதிகம். தாய்லாந்து போவோர் நிச்சயம் இந்த திமிங்கலப் பாறைக்கும் ஒரு விசிட் அடிப்பது வழக்கம். ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த மலை மீது அமர்ந்து சூரிய உதயத்தையும், சூரிய அஸ்தமனத்தையும் பார்த்து ரசிப்பதும் வழக்கமாகும்.

சமீபத்திய செய்திகள்

news

பார் போற்றும் பாரதி!

news

ஓடி விளையாடு பாப்பா.. அதுவும் இந்த மாதிரி விளையாடு பாப்பா... உடம்புக்கு ரொம்ப நல்லது!

news

சினிமாத் துறையினரை தொடர்ந்து பாதிக்கும் மன அழுத்தம்.. உரிய கவுன்சிலிங் அவசியம்!

news

தங்கம் விலையில் இன்று மாற்றமில்லை... வெள்ளியின் விலையும் சற்று குறைவு தான்!

news

Amma's Pride ஆஸ்கர் விருதுக்குப் போட்டியிடும் சென்னையில் உருவான குறும்படம்!

news

கண்ணீரைத் துடைக்க.. இறைவனே இறங்கி வந்து நிற்பான்!

news

ஜிடிபி வளர்ச்சியில் தமிழ்நாடு புதிய சாதனை.. பெரிய மாநிலங்களில் நம்பர் 1 நாமதான்!

news

Flashback 2025.. தென்னிந்தியத் திரையுலகுக்கு பெரும் சோகம் தந்து விடைபெறும் 2025!

news

புட்டு சாப்பிட்டிருப்பீங்க.. முள்ளங்கி புட்டு டேஸ்ட் பண்ணிருக்கீங்களா.. செமத்தியான டிஷ்!

அதிகம் பார்க்கும் செய்திகள்