சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ள தலைவெட்டியான் பாளையம் சீரிஸ் இப்போதே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ்தான் தலைவெட்டியான் பாளையம். பெயரே வித்தியாசமாக இருக்கிறதே என்று நினைத்தாலும் கூட சீரிஸ் முழுக்க முழுக்க காமெடி தான் களை கட்டியுள்ளதாம்.

தி வைரல் பீவர் நிறுவனம் தயாரித்துள்ள தலைவெட்டியான் பாளையம் வெப் சீரியஸை இயக்குனர் நாகா இயக்கியுள்ளார். குடும்ப பொழுதுபோக்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த சீரிஸில் அபிஷேக்குமார், சேத்தன், கடம்பி, தேவதர்ஷினி, நியாதி, ஆனந்த் சாமி மற்றும் பால்ராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த தலைவெட்டியான் பாளையம் காமெடியை மையமாகக் கொண்டு 8 எபிசோடுகளாக உருவாகியுள்ளது.
ஒரு பெரிய நகரத்தை சேர்ந்த ஒரு இளைஞன் தலை வெட்டியான் பாளையம் என்ற தொலைதூர கிராமத்தில் வேலைக்காக வருகிறான். அறிமுகம் இல்லாத சூழலின் சவால்களை எப்படி எதிர்கொள்கிறான் என்பதை சொல்கிறது. வரும் செப்டம்பர் 20ஆம் தேதி பிரைம் வீடியோவில் தலை வெட்டியான் பாளையம் வெப் சீரிஸ் பிரீமியர் செய்யப்படுகிறது. இது தமிழ் மற்றும் ஆங்கில சப் டைட்டில்களுடன் திரையிடப்பட உள்ளது. இந்த சீரிஸின் ட்ரெய்லர் சமீபத்தில் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல் இந்த சீரிஸ் முழுவதும் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
.jpg)
இந்த நிலையில் ஜிபி முத்துவும் அபிஷேக்குமாரும் இந்த சீரியஸில் நடிக்கும் கதாபாத்திரங்களை ஏற்று மையப்படுத்தி ஒரு அட்டகாசமான புரோமோ வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் தலை வெட்டியான் பாளைத்தின் டார்லிங் ஆக மாற ஐந்து அருமையான ஐடியாக்களை அபிஷேக் குமாரிடம் கூறுகிறார்.
1.எப்போதும் ஸ்ட்ரெஸ் ஆகக்கூடாது.
2.சம்பிரதாயமாக நடந்து கொள்ளக் கூடாது. ஏனெனில் இந்த கிராமத்தில் யாரும் புதியவர் இல்லை.
3.இயல்பாகப் பழக வேண்டும் அதே நேரம் புத்திக் கூர்மையுடன் இருக்க வேண்டும்.
4.பிரச்சனைகளிலிருந்து எப்போதும் ஒதுங்கி இரு
5 முக்கியமாக பேய்மரத்தை விட்டு எப்போதும் ஒதுங்கியே இரு.
.jpg)
இதையெல்லாம் ஒழுங்காக ஃபாலோ பண்ணினால் தலை வெட்டியான் பாளையத்தின் விசித்திரமான கிராமவாசிகளுக்கு பிடித்தவனாக இருப்பாய் என கூறியுள்ளார் ஜிபி முத்து.
சீரிஸ் வரட்டும்.. நாமளும் பார்த்து என்ஜாய் பண்ணலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
SIR:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும்: திருமாவளவன்
ஆந்திராவில் பேருந்து விபத்தில் 20 பேர் பலி: விபத்திற்கான காரணமாக வெளிவந்த அதிர்ச்சி தகவல்
ஐஸ்லாந்தும் என் ஆளுகையில்.. ஒத்தக் கொசு.. மொத்த நாடும் அலறுதே.. க(ப)டிச்சுப் பாருங்க!
12 மாவட்டங்களுக்கு இன்றும், 6 மாவட்டங்களுக்கு நாளையும் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
பாமக செயல் தலைவராக ஸ்ரீகாந்திமதி நியமனம்: பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!
Cyclone Montha... அக்.,28ல் ஆந்திரா மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடக்கிறது: வானிலை மையம் அறிவிப்பு
நெல்லின் ஈரப் பதம்.. தமிழ்நாட்டில் மத்தியக் குழு.. நாமக்கல் அரிசி ஆலையில் இன்று ஆய்வு
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை நவ., 4ம் தேதி வெளியீடு: அமைச்சர் அன்பில் மகேஸ்!
காலையில் தினமும் கண் விழித்தால் கை தொழும் தேவதை... டீ.. ஆனால் வெறும் வயிற்றில் குடித்தால்??
{{comments.comment}}