சென்னை: தளபதி 68 படமான கோட் மிகப் பெரிய எதிர்பார்ப்புகளைத் தூண்டி விட்டுள்ள நிலையில் விஜய் 69 படம் தொடர்பான ஒரு பரபரப்பான தகவல் உலா வர ஆரம்பித்துள்ளது. அதாவது இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை சமந்தா கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
லியோ படத்திற்கு பிறகு விஜய் நடித்து வரும் படம் தி கோட். இதில் விஜய் 3 வேடங்களில் நடித்துள்ளாராம். இந்த படம் விஜய்க்கு 68வது படமாகும். கல்பாத்தி அகோரம் தயாரிக்கும் இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். இப்படத்தில் சினேகா, லைலா, பிரபுதேவா, பிரசாந்த், அஜ்மல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். செப்டம்பர் 5ம் தேதி வெளியாகிறது இப்படம். இப்படத்தின் 2 பாடல்கள் வெளியாகி வைரலாகியது. இப்பாடல்களால் படம் குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இன்னும் அதிகரித்துள்ளது.
இந்த படத்திற்கு பிறகு தளபதி 69 படம் மட்டும் நடித்து விட்டு சினிமாவில் இருந்து விலகி விஜய் அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளதால், விஜய்யின் 69வது படம் குறித்து எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படம் குறித்து ரசிகர்கள் இஞ்ச் பை இஞ்ச்சாக பாலோ செய்து வருகின்றனர். இயக்குனர் யார்? பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர், நடிகை போன்ற தகவல்களை படு ஆர்வமாக ஆராய்ந்து வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், விஜய்யின் 69வது படம் குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளன. தீரன், துணிவு போன்ற படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கதாநாயகியாக சமந்தா நடிக்க உள்ளாராம். இசை அனிருத். பிரபல தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் அதிகார பூர்வ தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. விரைவில் வெளியாகும் என நம்பகத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுவரை வதந்திகள் உலா வந்தபடியே இருக்கும்..!
அமைச்சராகப் பதவியேற்றார் மனோ தங்கராஜ்.. மீண்டும் பால்வளத்துறையே ஒதுக்கீடு செய்யப்பட்டது!
நான் கேட்டதும் ஷாருக்கான் செய்த அந்த செயல்.. நெகிழ்ச்சியுடன் நினைவு கூறும் வாசிம் அக்ரம்
வங்கி வேலைக்கு Goodbye சொல்லி விட்டு.. Audi கார் மூலம் பால் விற்பனை செய்யும் இளைஞர்.!
கடற்படைக்காக.. 26 ரபேல் போர் விமானங்களை பிரான்சிடமிருந்து வாங்கும் இந்தியா!
அவமான ஆட்சிக்கு அதிமுக ஆட்சியே சாட்சி.. ரைமிங்காக பேசிய முதல்வர் மு.க ஸ்டாலின்..!
தமிழ்நாட்டில் இன்று முதல் மே 4 வரை.. டமால் டுமீலுடன்.. மிதமான மழைக்கு வாய்ப்பு..!
மே 4ல் அக்னி நட்சத்திரம்.. வெயிலின் தாக்கம் மேலும் அதிகரிக்கும்.. வானிலை மையம் எச்சரிக்கை!
கலவரத்தை தூண்டும் வகையில் வீடியோ.. பாகிஸ்தான் youtube சேனல்களுக்கு மத்திய அரசு தடை
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
{{comments.comment}}