சேர்ந்து நடிக்காமலேயே.. இணைந்த மணங்கள்.. அர்ஜூன் மகள், தம்பி ராமையா மகனின் காதல் கதை!

Oct 28, 2023,12:12 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: ஆக்சன் கிங் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதிக்கும் கோலாகலமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. விரைவில் திருமணம் நடக்கவுள்ளது .


ஆக்சன் கிங் அர்ஜுன்  தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்தவர். 90ஸ் கிட்ஸுக்குப் பிடித்த நடிகர்களில் இவரும் ஒருவர். 90களில் இவர் நடித்த படங்கள் அனைத்தும் தேசப்பற்றும் மிகுந்த படங்களாக இருந்தது .இவர் ஒரு நடிகராக மட்டுமல்லாமல் சேவகன், பிரதாப் ,ஜெய்ஹிந்த், சுயம்வரம், வேதம் ,ஏழுமலை, போன்ற  படங்களின் இயக்குனராகவும் திகழ்ந்தவர்.


இவர் தமிழ் மட்டுமின்றி தாய்மொழி கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடிப்பின் மூலம்  தனக்கென்று தனி அடையாளத்தை கொண்டவர். இவர் கன்னட படங்களுக்கு கதையும் எழுதி உள்ளார். இவருடைய படங்கள் என்றால் இன்றுவரை பார்க்கும் ரசிகர்கள் ஏராளம். சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தில் விஜய் என்ட்ரிக்கு தியேட்டரில் என்ன வரவேற்பு கிடைத்ததோ, அதேபோன்று ஹரால்டு தாஸ் என்ற அர்ஜுனுக்கும் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. அந்த அளவிற்கு இன்று வரை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் ஆக்சன் கிங் அர்ஜுன்.




அர்ஜுனுக்கு இரண்டு மகள்கள் உண்டு . ஐஸ்வர்யா மூத்த மகள். ஐஸ்வர்யா, விஷால் நடிப்பில் வெளிவந்த பட்டத்து யானை படத்தின் மூலம் அறிமுகமானார். இவருக்கு தமிழில் பெரிய அளவில் வாய்ப்பு இல்லை என்றாலும் கூட கன்னட மொழிகளில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.


அதேபோல தமிழ் திரையுலகில் குணச்சத்திர வேடங்களில் சிறந்த நடிகராக விளங்கியவர் தம்பி ராமையா. இவருடைய மகன் உமாபதி. உமாபதியும் ஐஸ்வர்யாவும் இணைந்து ஒரு படம் கூட தமிழில் நடிக்கவில்லை. ஆனால் என்ன மாஜிக்கோ.. இருவருக்குள்ளும் காதல் பூத்தது.. இந்தக் காதலுக்கு  இரு வீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே, காதலுக்கு  பச்சைக்கொடி காட்டிவிட்டனர். உமாபதிக்கும் ஐஸ்வர்யாவுக்கும் நேற்று நிச்சயதார்த்தம் இனிதே நடந்து முடிந்தது. திருமணமும் விரைவில் நடக்க உள்ளது. 


அர்ஜுன் மகள் ஐஸ்வர்யாவுக்கும் தம்பி ராமையா  மகன் உமாபதிக்கும் நடந்த நிச்சயதார்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதுடன் பலரும் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்தும் வருகின்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

India Vs Pakistan: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே முழு அளவிலான போர் மூண்டால் என்னாகும்?

news

ஸ்டெர்லைட்டுக்கு ஒரு நீதி என்.எல்.சிக்கு ஒரு நீதியா? உடனடியாக ஆலையை மூட வேண்டும்: டாக்டர் அன்புமணி

news

கல்வி தான் நமக்கான ஆயுதம்...கல்வியை மட்டும் விட்டுவிடவே கூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

news

நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக உள்ளது: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் அறிவிப்பு!

news

வலுக்கட்டாயமாக கடன் வசூலித்தால் 3ஆண்டு வரை சிறை.. சட்டசபையில் புதிய மசோதா தாக்கல்..!

news

மக்களின் வாழ்வாதாரமாக இருக்கும்.. சிந்து நதியை தடுத்து நிறுத்தும் முடிவை மாற்றுங்கள்.. சீமான்

news

வீடு கட்டும் ஜல்லி, எம் சாண்ட் விலை உயர்வால் கட்டுமான செலவு 30% அதிகரிப்பு!

news

கோவை வந்த விஜய்க்கு பிரம்மாண்ட வரவேற்பு... தொண்டர்களின் ஆரவாரத்தால் ஸ்தம்பித்தது கோவை!

news

ஆம்... மகளிருக்கு உரிமை வேண்டும்..!!

அதிகம் பார்க்கும் செய்திகள்