சவாயா சிட்டி, லிபியா: சட்டவிரோதமாக ஐரோப்பாவில் குடியேறுவதற்காக பாகிஸ்தானியர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானதில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த மாதம் ஜனவரி 29ஆம் தேதி ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக மோரிடானியாவில் இருந்து படகு மூலம் 65 பாகிஸ்தானியர்கள் உள்பட 80 பேர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் சென்ற படகு மொராக்கோவின் துறைமுக நகரமான டக்லா அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 44 பாகிஸ்தானியர்கள் உள்பட 50 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்கள் கிழக்கு பஞ்சாப் மாகாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தனர்.

தற்போது மீண்டும் அதே போன்ற ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. சட்டவிரோதமாக பாகிஸ்தானியர்கள் குடியேறுவது தொடர்கதையாகவே நடைபெற்று வருகிறது. இதனை தடுக்க பாகிஸ்தான் எந்த ஒரு நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை.
மீண்டும் ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காக பாகிஸ்தானை சேர்ந்த 63 பேர் கூட்டமாக படகில் சென்று உள்ளனர். அப்போது பாகிஸ்தானியர்கள் சென்ற படகு லிபியா கடற்பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பாரம் தாங்க முடியாமல் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில் 37 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 16 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரை காணவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
மோடி பங்கேற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்ட பராசக்தி படக்குழுவினர்
மாட்டுப் பொங்கலும் மாடுபிடி விளையாட்டும்!
கோபம் என்ற அரக்கனை எரித்து.. பொறாமை என்ற பகைவனை.. பொசுக்குங்கள்!
லீக்கான கூட்டணி பிளான்...நெருக்கடியில் டிடிவி தினகரன்
சிரஞ்ஜீவி படத்திற்கு எதிராக இளையராஜா வழக்கா? டைரக்டர் விளக்கம்
தம்பி அண்ணாமலைக்கு.. தமிழ் இனத்தின் மகனாக நாங்கள் துணை நிற்போம்.. சீமான்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வெள்ளி விலை இன்றும் புதிய உச்சம்!
இயற்கை வழிபாடும் பொங்கலும்!
வாழ்வில்....!
{{comments.comment}}