சண்டிகர்: திருமணம் முடிந்த கையோடு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்த ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரி வினை நர்வல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில், இயற்கை எழில் மிகுந்த அழகிய சுற்றுலாத்தளம் அமைந்துள்ளது. இதனை கண்டு ரசிக்க ஆண்டுதோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக தற்போது கோடை விடுமுறை என்பதால் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகை தர ஆரம்பித்தனர். அப்போது திடீரென பயங்கரவாதிகள் அப்பாவி மக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சுட்டு நடத்தி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வெளிநாட்டவர் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். இப்பகுதியில் எங்கு பார்த்தாலும் ரத்த வெள்ளத்தோடு சுற்றுலா பயணிகள் இறந்து கிடந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
அதே சமயத்தில் ராணுவ சீருடையில் பயங்கரவாதிகள் அப்பகுதியில் ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கடும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த நிலையில் காஷ்மீர் தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வெளியாகி நெஞ்சை பதபதைக்க வைத்துள்ளது.
அதில் ஹரியானாவை சேர்ந்த இந்திய கடற்படை அதிகாரி வினை நர்வல் கொச்சியில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு வயது 26. இவருக்கு கடந்த ஏப்ரல் பதினாறாம் தேதி திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆகி 7 நாட்களுக்குப் பிறகு வினய் நர்வலும், அவரது மனைவி ஹிமான்ஷி நர்வலும் , ஹனிமூனுக்காக காஷ்மீருக்கு வந்துள்ளனர். அங்கு ரோட்டு கடை உணவுகளை சுவைத்து கொண்டு இருந்தபோது அங்கிருந்து வந்த பயங்கரவாதிகள் நீ இஸ்லாமியரா இல்லையா கேட்டுக் சுட்டு படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் வெளிநாடுக்கு செல்ல திட்டமிட்டு விசா கிடைக்காத காரணத்தால் ஜம்மு காஷ்மீர் வந்து உயிரிழந்த சம்பவம் குறித்து வெளியான செய்திகள் கடும் வேதனை அளிக்கிறது.
2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!
அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?
கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி
தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?
என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?
முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!
{{comments.comment}}