சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மிகப்பிரமாண்டமான வரவேற்புடன் அக்கட்சி தலைவர் விஜய் விழா நடைபெறும் இடத்திற்கு வருகை தந்துள்ளார். பின்னர் விஜய் மேடையில் அமர விழா இனிதே தொடங்கியுள்ளது.
நடிகர் விஜய் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை வலுப்படுத்துவதற்காக பல்வேறு யுத்திகளை கையாண்டு வருகிறார். 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக ஒவ்வொரு காய்களையும் துரிதமாக நகர்த்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதில் ஒரு பகுதியாக, 234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் 120 மாவட்டங்களாக பிரித்து ஒவ்வொரு தொகுதிக்கும் இரண்டு உறுப்பினர்கள் வீதம் என பிரித்து மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தை விறுவிறுப்பாக செய்து முடித்தார்.
அதேபோல் கடந்த மாதம் தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது . இதில் விஜய் திமுக,பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன் வைத்தார். இது அரசியல் வட்டாரத்தில் தற்போது வரை தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அப்போது விரைவில் கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் நடைபெறும். அதனைத் தொடர்ந்து விஜயின் சுற்றுப்பயணம், பூத் கமிட்டி மாநாடு என அடுத்தடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இது ஒரு பக்கம் இருக்க, மறுபக்கம் தமிழ் சினிமாவில் விஜயின் இறுதிப் படமான ஜனநாயகன் படத்தில் மும்மரமாக நடித்து வருகிறார். இப்படம் முடிவடைய இன்னும் இருபது நாட்களே இருப்பதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் முழு நீள அரசியல்வாதியாக களம் காண இருக்கிறார். ஜனநாயகம் படத்தை முடித்துவிட்டு விஜயின் சுற்றுப்பயணம் மற்றும் தேர்தல் பூத் கமிட்டி மாநாடு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் திருவான்மியூர் ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வரும் 28ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து விழா நடைபெறும் இடத்தில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் தடபுடலாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று காலை சரியாக 9 மணிக்கு தொடங்கியது. இந்த கூட்டத்தில் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், சிறப்பு அழைப்பாளர்கள், பெண் பிரதிநிதிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
கட்சியின் முதன் பொதுக் குழு கூட்டம் என்பதால் உறுப்பினர்களை வரவேற்கும் விதமாக, வளாகத்தில் இரண்டு கம்பீரமாக யானைகள் வரவேற்க, மயிலாட்டம், கரகாட்டம், பொய்க்கால் குதிரை, என ஆட்டம் பாட்டமாக தொடங்கியுள்ளது.
அதேபோல் பொதுக்குழு கூட்டத்தை தலைமையேற்கும் விஜயை வரவேற்க ஆட்டம் பாட்டத்துடன் செண்டை மேளம் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. விஜய் மேடையில் அமர்ந்த பிறகு விழா இனிதே தொடங்கியுள்ளது.
தொடர்ந்து விழாவில் தவெக தலைவர் விஜய் சிறப்புரையாற்றி, பின்னர் உறுப்பினர்கள் முன்னிலையில் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.
உஷார் மக்களே... இன்று 20, நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் எச்சரிக்கை
திமுகவை வகுத்தால் தமிழ்நாடு... தமிழ்நாட்டு மக்களை எல்லாம் கூட்டினால் திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின்!
Madurai Power cut: மதுரையில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் கட்.. உங்க ஏரியா இருக்கா பாருங்க!
ADMK-BJP talks: எடப்பாடி பழனிச்சாமி - அமித்ஷா சந்திப்பின்போது என்னெல்லாம் பேசப்பட்டது?
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
{{comments.comment}}