சென்னை: இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனைவருக்குமானது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 76வது ஆண்டுக் கொண்டாட்டம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளையெட்டி இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பல்வேறு போட்டிகளை நடத்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நாளையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள், அரசியலமைப்பு சட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில், இந்தியா என்பது ஒரு குறிப்பிட்ட கருத்தியலுக்கும், பண்பாட்டிற்கும் மட்டுமே உரியது இல்லை, இந்திய மக்கள் அனைவருக்குமானது. எனவே, அரசியலமைப்பு நாளான இன்று அம்பேத்கரின் கருத்தை சிதைக்க முன்னெடுக்கப்படும் அனைத்து முயற்சிக்களையும் முறியடிப்போம்.
இந்திய அரசியலமைப்பின்படி, இந்திய கூட்டாட்சியை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம். அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் காப்போம்" என தெரிவித்துள்ளார்.
அதேபோல் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ”இந்திய அரசியலமைப்புச் சட்டம் வெறும் புத்தகம் அல்ல. ஒருவர் எந்த மதம் அல்லது எந்த சாதி, எந்த மொழியை பேசினாலும், சமத்துவம், மரியாதை, நீதியைப் பெறுவார் என்ற வாக்குறுதி வேண்டும்.அ ரசியலமைப்பு சட்டம் ஏழைகளுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் பாதுகாப்புக் கவசம். ஒவ்வொரு குடிமகனின் குரல் என தெரிவித்துள்ளார்.
வருக வருக.. தை மகளே வருக..!
உழவே உயிர்!
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
நிசமான பொங்கல்!
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
பெரும் பொங்கல்!
{{comments.comment}}