முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

Apr 16, 2025,06:49 PM IST

டெல்லி: வக்பு வாரிய திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த புதிய சட்டத்தில் உள்ள சில குறிப்பிட்ட அம்சங்கள் குறித்து மத்திய அரசுக்கு நீதிமன்றம் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, 'வக்பு பை யூசர்' சொத்துக்கள் தொடர்பான விதிகள் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், மத்திய வக்பு கவுன்சிலில் முஸ்லிம் அல்லாதவர்களைச் சேர்ப்பது குறித்தும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்து அறக்கட்டளை வாரியங்களில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிக்க முடியுமா என்றும் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.


பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம் மத்திய அரசு விளக்கம் அளிக்குமாறு கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.


வக்பு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 73 மனுக்களை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த சட்டத்திற்கு நாட்டின் பல பகுதிகளில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த வழக்கை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பலாமா, மனுதாரர்கள் என்ன வாதங்களை முன்வைக்க விரும்புகிறார்கள் என்பது குறித்து நீதிமன்றம் மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளது.




மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், புதிய சட்டத்தின் பல விதிகள் அரசியலமைப்புச் சட்டத்தின் 26வது பிரிவை மீறுவதாக வாதிட்டார். இந்த பிரிவு மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமையை வழங்குகிறது. கலெக்டருக்கு புதிய சட்டம் வழங்கும் அதிகாரத்தையும் அவர் சுட்டிக்காட்டினார். கலெக்டர் அரசாங்கத்தின் ஒரு பகுதி என்றும், அவர் நீதிபதியாக செயல்பட்டால் அது அரசியலமைப்புக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.


'வக்பு பை யூசர்' என்ற விதிமுறையையும் கபில் சிபல் குறிப்பிட்டார். இந்த விதிமுறையின் கீழ், ஒரு சொத்து நீண்ட காலமாக மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டால், முறையான ஆவணங்கள் இல்லாவிட்டாலும் அது வக்பு சொத்தாகக் கருதப்படும். சொத்துக்கள் சர்ச்சையில் இருந்தாலோ அல்லது அரசாங்க நிலமாக இருந்தாலோ இந்த விதி பொருந்தாது என்று புதிய சட்டம் கூறுகிறது.


'வக்பு பை யூசர்' என்பது இஸ்லாத்தின் ஒரு முக்கிய அம்சம் என்று கபில் சிபல் கூறினார். "ஒரு வக்பு 3,000 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டிருந்தால், அதற்கான ஆவணங்களைக் கேட்பார்கள்," என்று அவர் கூறினார்.


மற்றொரு மனுதாரருக்காக ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, நாட்டில் உள்ள 8 லட்சம் வக்பு சொத்துக்களில் 4 லட்சம் 'வக்பு பை யூசர்' சொத்துக்கள் என்று கூறினார். அப்போது தலைமை நீதிபதி குறுக்கிட்டு, "டெல்லி உயர் நீதிமன்றம் வக்பு நிலத்தில் கட்டப்பட்டுள்ளது என்று எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'வக்பு பை யூசர்' அனைத்தும் தவறு என்று நாங்கள் கூறவில்லை, ஆனால் இதில் உண்மையான கவலை உள்ளது," என்று கூறினார். சில விதிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புவதாகவும், முழு சட்டத்திற்கும் அல்ல என்றும் சிங்வி கூறினார்.


மத்திய அரசுக்காக ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, இந்த சட்டம் நாடாளுமன்றத்தில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு நிறைவேற்றப்பட்டது என்று கூறினார். ஒரு கூட்டு நாடாளுமன்றக் குழு இதை ஆய்வு செய்து இரு அவைகளிலும் மீண்டும் நிறைவேற்றியது என்றும் அவர் கூறினார்.


புதிய சட்டத்தில் உள்ள ' வக்பு பை யூசர்' விதிகள் குறித்து கவனம் செலுத்துமாறு தலைமை நீதிபதி, மேத்தாவிடம் கேட்டுக் கொண்டார். "'வக்பு பை யூசர்' நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் அல்லது வேறுவிதமாக நிறுவப்பட்டிருந்தால், இன்று அது செல்லாததாகிவிடும் என்று நீங்கள் கூறுகிறீர்களா?" என்று தலைமை நீதிபதி கேட்டார்.


13, 14 மற்றும் 15 ஆம் நூற்றாண்டுகளில் வக்புவின் ஒரு பகுதியாக பல மசூதிகள் கட்டப்பட்டதாகவும், அவற்றுக்கான ஆவணங்களை சமர்ப்பிக்க முடியாது என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டார். "நீண்ட காலமாக இருக்கும் 'வக்பு பை யூசர்' சொத்துக்களை எப்படி பதிவு செய்வது? அவர்களிடம் என்ன ஆவணங்கள் இருக்கும்? இது சிலவற்றை செயலற்றதாக்க வழிவகுக்கும். ஆம், சில தவறான பயன்பாடுகள் உள்ளன. ஆனால் உண்மையானவையும் உள்ளன. நான் Privy Council தீர்ப்புகளைப் பார்த்திருக்கிறேன். 'வக்பு பை யூசர்' அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நீங்கள் அதை செயலற்றதாக்கினால், அது ஒரு பிரச்சனையாக இருக்கும்," என்று தலைமை நீதிபதி கூறினார்.


புதிய சட்டத்தின் கீழ் மத்திய வக்பு கவுன்சிலின் அமைப்பு குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. "மேத்தா, இந்து அறக்கட்டளை வாரியங்களில் முஸ்லிம்களை உறுப்பினர்களாக அனுமதிக்கிறீர்கள் என்று கூறுகிறீர்களா? அதை வெளிப்படையாகச் சொல்லுங்கள்," என்று தலைமை நீதிபதி கேட்டார்.


புதிய சட்டம் குறித்து வன்முறை நடைபெறுவது "மிகவும் disturbing" ஆக உள்ளது என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். அதற்கு மேத்தா, "அவர்கள் அமைப்பை pressurise செய்ய முடியும் என்று நினைக்கிறார்கள்" என்று கூறினார். அதற்கு சிபல், "யார் pressurise செய்கிறார்கள் என்று தெரியவில்லை" என்று பதிலளித்தார். சட்டத்தில் உள்ள சாதகமான அம்சங்களை எடுத்துரைக்க வேண்டும் என்று தலைமை நீதிபதி குறிப்பிட்டார். இந்த வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!

news

ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!

news

எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி

news

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு

news

ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை

news

Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

news

தமிழ்நாட்டில்.. இன்று மழையும், வெயிலும் இருக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான்!

news

Real Life Dragon: டிராகன் பட பாணியில் விர்சுவல் இண்டர்வியூவில் ஆள்மாறாட்டம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்