டெல்லி: தமிழக பாஜக தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதால் அரசியல் வட்டாரங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில், பாஜக மற்றும் அதிமுக கட்சிகளுக்கிடையே ஏற்பட்ட விரிசல் தற்போது சரியாகி மீண்டும் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு அதிமுக தலைவர்கள் குறித்து அண்ணாமலை சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். இந்த பேச்சு அதிமுகவினர்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது. இதனால், பாஜக - அதிமுக இடையே கூட்டணி முறிவு ஏற்பட்டது. இனி எப்போது பாஜகவுடன் கூட்டணி என்பதே கிடையாது என்று அதிமுக தலைமை மற்றும் நிர்வாகிகள் தீவிரமாக கூறி வந்தனர்.
பலமுறை கூட்டணி குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி பேச்சிற்கே இடம் இல்லை என்று தெரிவித்து வந்தது. அதேசமயம் பாஜகவுடன் அதிமுக இணைந்தால் நான் பதவியை ராஜினாமா செய்வேன் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திடீர் என டெல்லி புறப்பட்டு சென்றார். டெல்லி சென்ற எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து 45 நிமிடங்கள் பேசிவிட்டு சென்னை திரும்பினார்.
அதன்பின்னர் பாஜக கட்சி தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாஜக மாநில தலைவர் பதவியிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது.இதனால் அதிமுக கூட்டணியில் பிளவு ஏற்பட காரணமாக இருந்த மாநில தலைவரை நீக்கம் செய்து விட்டு பாஜக-அதிமுக கூட்டணியை தொடர இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் தகவல்கள் பரவி வருகின்றன.
இந்நிலையில், புதிய மாநில தலைவரக்கான போட்டியில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் முன்னிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மத்திய அமைச்சர் எல்.முருகன், பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோரும் மாநில தலைவர் பதவிக்கு பரிசீலனை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
குடியரசுத் தலைவருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. நாளை டெல்லியில் அனைத்துக் கட்சி கூட்டம்!
Operation Sindoor.. பாகிஸ்தானை எப்படி தாக்கினோம்.. விளக்கிய பெண் அதிகாரிகள்.. யார் இவர்கள்?
4 years of DMK Govt: திராவிட மாடல் ஆட்சியே விடியல் தரும் ஆட்சி.. முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
இந்திய தாக்குதலில்.. எங்க குடும்பத்துல 10 பேரு செத்துப் போயிட்டாங்க.. மசூத் அஸார் அலறல்!
மங்கள மீனாட்சிக்கு மதுரையில் திருக்கல்யாணம்.. பெண் குழந்தைகளுக்கு வைக்க 31 தமிழ்ப் பெயர்கள்!
ராணுவத்திற்கு ராயல் சல்யூட் அடித்த விஜய்.. இதுதான் இந்தியாவின் முகம்.. பாராட்டிய சிவகார்த்திகேயன்!
இந்தியாவின் 25 நிமிடத் தாக்குதல்.. கொல்லப்பட்ட 70 பயங்கரவாதிகள்.. திரில் நடவடிக்கை!
IPL வரலாற்றில் சூர்யகுமார் யாதவ் புதிய சாதனை.. 3வது முறையாக.. 500+ ரன்களைக் கடந்து புதிய வரலாறு!
சென்னை சூப்பர் கிங்ஸுடன் இன்று மோதல்.. பெரும் வெற்றியைப் பெறும் மும்முரத்தில் KKR!