லூதியானா: கடந்த போட்டிகளில் காணாத தீரமான போராட்டத்தை இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்ஸ்மென்கள் வெளிப்படுத்திய போதிலும் கூட மிகக் கடுமையான ஸ்கோரை சேஸ் செய்ய முடியாமல் மீண்டும் தோல்வியைத் தழுவியுள்ளது.
200 ரன்களுக்கு மேல் சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸ் செய்து வென்றே பல வருடமாகி விட்டது. 2012ம் ஆண்டுதான் கடைசியாக அந்த அணி 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்துள்ளது சென்னை அணி. அதிகபட்சமாக 206 ரன்களைத்தான் சென்னை சூப்பர் கிங்ஸ் சேஸ் செய்துள்ளது. ஆனால் இன்றைய போட்டியில் 220 ரன்கள் எடுத்தாக வேண்டும். மிகப் பெரிய டாஸ்க்.. என்ன செய்யப் போகிறது சென்னை என்பது ரசிகர்களின் பெரும் அயர்ச்சியாக இருந்தது.
மீண்டும் ஒரு தோல்வி - ஏமாற்றத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்
ஆனால் கடந்த போட்டிகளில் இல்லாத அளவுக்கு இந்தப் போட்டியில் ஒரு உத்வேகத்தைப் பார்க்க முடிந்தது. அதேசமயம், தொடக்கத்தில் அதிரடி காட்டிய சென்னை அணி, இடையில் சொதப்பி விட்டது. இதனால் கடைசி நேரத்தில் கடுமையாக போராடிய போதிலும் கூட போதிய பந்துகள் இல்லாமல் போனதால் 201 ரன்களில் சென்னை அணியின் சேசிங் நின்று போனது. கடுமையாக போராடி 19 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
தோனி இன்றைய போட்டியில் பழைய அதிரடியைக் காட்டி அசத்தலாக ஆடினார். 12 பந்துகளில் 27 ரன்களைக் குவித்தார் தோனி. கான்வே 69, சிவம் துபே சற்று அதிரடி காட்டி ஸ்கோரை உயர்த்த உதவினார். மீண்டும் ஒரு தோல்வியைச் சந்தித்துள்ள சென்னை அணிக்கு வரப் போகும் போட்டிகள் மிக மிக முக்கியமானவை. சில முக்கிய வெற்றிகளை அது பெற்றால்தான் நல்லது.
பிரித்து மேய்ந்த பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா
முன்னதாக பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா இன்று மிரட்டி விட்டார். முதல் பந்திலிருந்தே பிரித்து மேய்ந்து விட்டார் பிரியான்ஷ். வந்த பந்தையெல்லாம் பவுண்டரிக்கும், சிக்ஸருக்குமாக அவர் பறக்க விட மிரண்டு போய் விட்டது சென்னை. அதி வேகமாக 50, அடுத்து அதி வேகமாக 100 என்று மிரட்டினார் பிரியான்ஷ். தைரியமாக அவர் விளையாடிய விதம் அனைவரையும் கவர்ந்து விட்டது.
மறுபக்கம் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து வந்தது பஞ்சாப். ஒரு கட்டத்தில் 100 ரன்களுக்குள் 5 விக்கெட்களை இழந்திருந்தது பஞ்சாப் அணி. ஆனால் சென்னை அணியின் மோசமான பீல்டிங், சில நல்ல கேட்ச்சுகளை மிஸ் செய்தது அந்த அணிக்கு பெரும் பின்னடைவைக் கொடுத்து விட்டது. பிரியான்ஷ் போன பிறகு வந்த சசாங் அபாரமாக ஆடி அரை சதம் போட்டு அணியின் ஸ்கோரை தொய்வில்லாமல் கொண்டு போய் விட்டார்.
சென்னைக்குக் காத்திருக்கும் சவால்
சென்னை அணி எந்த இடத்திலும் சுதாரிக்கவில்லை. வழக்கம் போல ரசிகர்களை ஏமாற்றியது பீல்டிங்கும், பவுலிங்கும். இன்றைய சேசிங்கில் சென்னை அணி வெற்றிகரமாக கடந்தால் மிகப் பெரிய சாதனையாக அது அமையும். முன்னதாக பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி உள்ளது. இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி முதல் போட்டியில் மட்டுமே வெற்றியை நிலைநாட்டியது. தொடர்ந்து எதிர்கொண்ட மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது. இந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை மட்டுமல்லாமல் எரிச்சலையும் கோபத்தையும் அதிகப்படுத்தி உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களின் பேட்டிங், பௌலிங் முதல் போட்டியில் சிறப்பாக இருந்தாலும் கூட அடுத்தடுத்த போட்டிகளில் சிறப்பாக விளையாடவில்லை.
மகேந்திர சிங் தோனி அசத்துவாரா?
ரச்சின் ரவீந்திரன், கெய்க்வாட், சிவம் டூபே ஆகியோர் அணியின் ஸ்கோர் ஓரளவு உயர காரணமாக இருந்தனர்.தோனி கடைசி ஆட்டத்தில் இறங்கி அடித்து விளாசுவார், டீமிற்கு வெற்றியை தருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் தோனியோ பந்துகளை அடித்து ஆடாமல் டிபன்ஸ் மட்டுமே செய்து ஆடி வருகிறார். இதனால் ரசிகர்கள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். இது என்ன டெஸ்ட் போட்டியா. இதற்கு தோனி ஓய்வு பெறுவதே மேலானது என ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை சோசியல் மீடியாக்களில் தெரிவித்தனர்.
இந்த நிலையில் பஞ்சாப் அணியுடன் சென்னை அணி இன்று மோதும் போட்டி கடும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. சென்னை அணி விளையாடும் அடுத்த பத்து போட்டிகளில் ஏழு போட்டிகள் கட்டாயமாக வெல்ல வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுந்துள்ளது. எனவே இன்று நடக்கும் ஐந்தாவது போட்டியில் சென்னை அணி அதிரடியாக விளையாடுமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. சென்னையும் விளையாடியது, ஆனால் வெற்றி பெறத் தவறியது.
ஆளுநர் ஆர். என். ரவி.. பாஜக தலைவராக வந்து அரசியல் செய்யலாமே.. அமைச்சர் கோவி. செழியன்
துணைவேந்தர்களுக்கு மிரட்டல்.. முதல்வர் ஸ்டாலின் அச்சப்படுகிறாரா.. ஆளுநர் ஆர். என். ரவி கேள்வி
ஏ.ஆர்.ரஹ்மான் மீது காப்புரிமை வழக்கு... ரூ.2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!
பாகிஸ்தானியர்களை வெளியேற்றுங்கள்.. மாநில அரசுகளுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா அறிவுறுத்தல்!
ஒரு வருஷத்துக்கு முன்பு என்னைப் புகழ்ந்தவர்களா இவர்கள்??.. ஒலிம்பியன் நீரஜ்சோப்ரா பெரும் வேதனை!
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில்.. துப்பாக்கிச் சூட்டில் இறங்கிய பாக்.. இந்தியா பதிலடி
முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மே 3ம் தேதி பாராட்டு விழா: அமைச்சர் கோவி செழியன் அறிவிப்பு
ஆளுநர் ஆர். என். ரவி கூட்டிய ஊட்டி மாநாடு.. அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பங்கேற்கவில்லை
Tnpsc exam: 3935 பணிகளை நிரப்ப குரூப்-4 தேர்வு தேதி வெளியீடு.. இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!
{{comments.comment}}