கோவை: வால்பாறையில் இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
2021ம் ஆண்டு கோவை மாவட்டம் பால்பாறை தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்டு வென்றவர் அமுல் கந்தசாமி. சிறுவயது முதலே அதிமுகவில் இருந்து வந்தவர் அமுல் கந்தசாமி. ஊராட்சி துணைத் தலைவர், கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளிலும் இருந்துள்ளார்.
இவர் அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளராகவும் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அமுல் கந்தசாமி, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி கடந்த 21ம் தேதி உயிரிழந்தார்.

வால்பாறை அதிமுக எம்எல்ஏ., உயிரிழந்துள்ளதால் அந்த தொகுதி தற்போது காலியாகி உள்ளது. இந்த தொகுதி தேர்தல் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. வால்பாறை தொகுதிக்கு எந்த நேரத்திலும் இடைத் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்றும், 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்கு தமிழக அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் இடைத்தேர்தல் நடத்தாமலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்றும் இருவேறு கருத்துக்கள் இருந்து வந்தது.
இந்நிலையில், பொதுத்தேர்தலுக்கு ஓராண்டு காலம் உள்ள நிலையில், அதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி மறைவையொட்டி வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தகவல் வெளியிட்டுள்ளது.
விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சி.. அடுத்தடுத்து டக் அவுட் ஆனால்.. ரவி சாஸ்திரி வார்னிங்!
தமிழ்நாட்டில் நாளை.. அரசு அலுவலகங்கள்.. பள்ளிகள் இயங்கும்.. மாநில அறிவிப்பு
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
கேரளாவில் இனி யாரும் மிக ஏழைகள் அல்ல.. நவம்பர் 1ல் பிரகடனம் செய்கிறார் முதல்வர் பினராயி விஜயன்
தங்கம் வெள்ளியின் இன்றைய விலை நிலவரம் என்ன தெரியுமா? இதோ இன்றைய முழு விபரம்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 24, 2025... இன்று நன்மை தேடி வரும் ராசிகள்
தூய்மை பணியாளர்களுக்கு 3 வேளை இலவச உணவு : தமிழ்நாடு அரசு
Tamil Nadu heavy Rain alert: 14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம் தகவல்!
{{comments.comment}}