- க.யாஸ்மின் சிராஜூதீன்
அழகு எல்லாம் அழகில்லை
அழகில்லாமல் வாழ்கை இல்லை ...
முகத்தின் அழகு அழகில்லை
அழகில்லாமல் அகமும் இல்லை...
சிரிப்பில்லாத முகம் அழகில்லை
அழகில்லாமல் சிரிப்பு இல்லை....
உண்மையில்லாத நட்பு அழகில்லை
அழகில்லாமல் நட்பு இல்லை...

மகிழ்ச்சியில்லாத குடும்பம் அழகில்லை
அழகில்லாமல் குடும்பம் இல்லை...
உயிரோட்டமில்லாத கலைகள் அழகில்லை
அழகில்லாமல் கலைகள் இல்லை...
நிலவில்லாத வானம் அழகில்லை
அழகில்லாமல் வானம் இல்லை....
பசுமையில்லாத இயற்கை அழகில்லை
அழகில்லாமல் இயற்கை இல்லை....
காற்றில்லாத மரங்கள் அழகில்லை
அழகில்லாமல் மரங்கள் இல்லை....
உதிராத பூக்கள் அழகில்லை
அழகில்லாமல் பூக்களும் இல்லை....
பாயாத அலைகள் அழகில்லை
அழகில்லாமல் கடலலைகள் இல்லை...
பாதையில்லாத கரடு முரடு பாதை அழகில்லை
அழகில்லாமல் பயணங்கள் இல்லை...
பலமில்லாத மனம் அழகில்லை
அழகில்லாமல் மனம் இல்லை...
இக்கரையும் அக்கரையும் அவரவர்க்கு அழகில்லை
அழகில்லாமல் இக்கரையும் அக்கரையும் இல்லை....
அழகு ஒன்றே அழகில்லை
அழகில்லாமல் அழகு இல்லை...
அழகு இல்லாமல் இல்லை இப்புவியில்...
நாம் அணுகும் முறையில்
மறைந்து இருக்கு...
விரும்பி ரசித்து வாழ்ந்திடு உலகினில்..
அழகு இல்லாமல் இல்லை....
(கவிஞர் க.யாஸ்மின் சிராஜூதீன் இடைநிலை ஆசிரியர். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கரடிக்குப்பம். மேல்மலையனூர் ஒன்றியம் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். 26.09.2014 முதல் இடைநிலை ஆசிரியராக 11 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். 2 ஆண்டுகளாக கவிதை, சிந்தனை துளிகள், சிறுகதை, வகுப்பறைக்கு பாடங்கள் தொடர்பான பாடல்கள் எழுதி வருகிறார். பிரதிலிபி தளத்தில் கவிதைகளைப் பதிவிட்டு வருகிறார். தொடுவானம் கவிதை குழுமம் நடத்தும் whatsApp வழியாக கவிதை எழுதும் போட்டியில் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார்)
2025ம் ஆண்டில் ஒரு லட்சம் ரூபாயைத் தாண்டிய தங்கத்தின் 'மின்னல்' பயணம்
2026-ல் இந்தியச் சந்தையில் வெளியாகப் போகும் மிகச்சிறந்த 3 கார்
பயணம் முழுமையல்லதான்.. ஆனால் சூப்பரானது.. Personal struggle and how you overcome!
மாமனார் சாயலில் மற்றுமொரு அப்பா!
இந்திய மொபைல் சந்தையில் செம சண்டை.. 2025ல்.. யாரெல்லாம் கலக்கியிருக்காங்க பாருங்க!
2025ல் இந்தியர்கள் கூகுளில் எதை அதிகமாக தேடியிருக்கிறார்கள் பாருங்களேன்!
2025ல்.. மாருதி காரை பின்னுக்குத் தள்ளி மிரட்டிய.. டாடா நெக்ஸான்!
அதிரும் வங்கதேச அரசியல்.. போராட்டம் எதிரொலி.. உள்துறை சிறப்பு உதவியாளர் ராஜினாமா!
அதிமுக கூடாரத்தில் சலசலப்பு: தவெக-வில் இணையப்போகும் முக்கிய புள்ளிகள்? செங்கோட்டையன் சூசகம்!
{{comments.comment}}