- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 13 ஆண்டாள் திருப்பாவை பாசுரம் 13.. புள்ளிவாய் கீண்டானை பொல்லா அரக்கனை
திருப்பாவை பாசுரம் 13 :
புள்ளிவாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய் !
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடந்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

பொருள் :
பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயை பிளந்து அழிப்பதற்காக கண்ணனாகவும், அடுத்தவரின் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனை தலையை கொய்ய ராமராகவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழை பாடியபடியே, நம்முடைய தோழியர்கள் அனைவரும் பாவை நோன்பு இருக்கும் இடத்திற்கு சென்று அடைந்து விட்டார்கள். கீழ்வானத்தில் வெள்ளியை போல் சூரியன் தோன்ற துவங்கி விட்டது. நிலவு மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற அழகிய கண்களை உடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும், குளிர்ந்த நீரில் நீராடி வராமல் இன்னுமா இப்படி தூங்கிக் கொண்டிருப்பாய்? அந்த கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நல்ல நாள் தான். மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் அதிக சிறப்பாயிற்றே! தூக்கத்தில் இப்படி மறைந்து கொண்டிருக்காமல் திருடனை போல் வீட்டிற்குள் மறைந்து கொண்டிருக்காமல் எங்களுடன் நீராட வா.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!
இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு
நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!
பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?
தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!
மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!
வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!
{{comments.comment}}