- ஸ்வர்ணலட்சுமி
மார்கழி 6 ஆண்டாளின் திருப்பாவை பாசுரம் 6.. புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்!
திருப்பாவை பாசுரம் 6:
புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

பொருள் :
புற்கள் தங்கள் மீது படர்ந்தள்ள பனிதுளிகளை உதருவதும், பறவைகள் அதிகாலையில் எழுந்து கீச்சிடும் சத்தம் உனக்கு கேட்கவில்லையா? கருடனை வாகனமாகக் கொண்டு எம்பெருமான் நாராயணனின் கோவிலில் வெள்ளை நிற சங்கும் எழுப்பும் ஒலி உன் காதுகளில் விழவில்லையா? கொடிய உருவம் எடுத்து தன்னை கொல்ல வந்த பூதகியிடம் பால் குடிப்பது போல் அவளின் உயிரை குடித்தவனும், சக்கர வடிவில் வந்து சகடன் என்ற அரக்கனின் உயிரை பறித்தவனுமான கண்ணனை யோகிகளும், முனிவர்களும், "ஹரி ஹரி" என்று அழைக்கும் குரலும் கூடவா உன் காதுகளில் விழவில்லை. உடனே எழுந்து எங்களுடன் வந்து இந்த ஒலிகளை கேட்டு உள்ளம் மகிழ வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
பெரும் பொங்கல்!
தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
சபரிமலை மகரஜோதி தரிசனம் 2026...சாமியே சரணம் ஐயப்பா...சரண கோஷம் விண்ணை பிளக்க பக்தர்கள் பரவசம்
{{comments.comment}}