- ஸ்வர்ணலட்சுமி
மாணிக்கவாசகர் அருளியது திருவெம்பாவை. சிவபெருமானைப் போற்றிப் பாடிய பாடல்களின் தொகுப்புதான் திருவெம்பாவை. மார்கழி மாதத்தையொட்டி இந்தப் பாடல்களை தினசரி ஒன்றாகப் பார்ப்போம்.

திருவெம்பாவை பாசுரம் 1 :
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாட்டடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள்
வாழ்த்திய வாழ்த்தொலிபோய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின்மே னின்றும் புரண்டிங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதேயெந் தோழி பரிசேலோ ரெம்பாவாய்.

பொருள் :
முதலும் முடிவும் இல்லாத ஜோதி வடிவமாக காட்சி தரும் நம்முடைய தலைவனாகிய சிவபெருமானை போற்றி பாடாமல், அவரை தொழுது அடியாளர்கள் பாடிடும் இசை ஒலி கேட்காமல் இப்படி தூங்குகின்றாயே இது சரி தானோ. அடியார்கள் பாடிடும் இந்த பாடலின் சத்தம் உன் காதுகளில் விழவில்லையா? உன்னுடைய காது செவிடா?
சிவன் அடியார்கள் பாடுவதை வீதிகளில் கேட்டு உணர்ச்சி வசப்பட்டு, கண்ணீர் பெருகி விம்மி விம்மி அழுது, வீதிகளில் புரண்டு அழுதிடுவாயே. என்னுடைய தலைவன் சிவன் என முழக்கமிடுவாயே. இப்போது இப்படி தூங்கிக் கொண்டிருப்பது சரியா? எழுந்து வந்து எங்களுடன் சிலம்பணிந்த சிவ பெருமானின் திருவடிகளின் பெருமைகளை சொல்லி பாடிட வா பெண்ணே.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}