- கவிஞர் சு. நாகராஜன்
ஒற்றைப்பனை உயரமாய்
ஓங்கி உயர்ந்த கட்டிடம்
ஏறி தாண்ட முடியாத
சுற்றுச்சுவர் சுற்றிலும்
கயிறு போல நீண்டு தான் புகைவண்டி செல்லுது
பறவை என்று வியந்தேன்
உயிர் இல்லையே
கழுகு போல வேகமாய்
காற்றை உரசி செல்லுது
முதல் பரிசு வாங்கணுமே
கனவு கண்டேன் _இங்கு
முற்றமே இல்லையே
தெரிந்து கொண்டேன்
கடலிலே நீச்சல் அடிக்க
மனது கொண்டதே
அதை பழகிக் கொள்ள
எங்க ஊரில் கிணறு இல்லையே
மழை பெய்தால்
மண் வாசம் மறைந்து போனதே
இன்று தெருவெல்லாம் கற்கள் போட்டு அடைக்கப்பட்டதால்
எங்கையா இருக்கு
என் தாத்தா வாழ்ந்த கிராமம்
அங்கேயே தங்குகிறேன்
இந்த நகரம் எனக்கு நரகம்
(சு. நாகராஜன், இடைநிலை ஆசிரியர், அரசு தொடக்கப்பள்ளி, அகஸ்தீஸ்வரம், கன்னியாகுமரி மாவட்டம்)
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
மாறுமா சமுதாயம்?
வரிகள் கண்ட கண்கள்... இசையை இதழில் சேர்க்கும்..!
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
{{comments.comment}}