இரு திசைப் பறவைகள் இவை!

Oct 18, 2025,12:26 PM IST

- ஷீலாராஜன், சென்னை


இன்று ஏதாவது மெசேஜ் அனுப்பி இருக்கிறாரா? என்று வாட்ஸ் அப்பை திறந்து பார்த்தார் சகி. ஏமாற்றம்தான் மிஞ்சியது. "ம்" என்ற ஒரு பெருமூச்சு எழுந்தது..


சில வாரங்களாகி விட்டன அவரிடம் இருந்து ஒரு குட் மார்னிங் செய்தி கூட வரவில்லை. அருணின் ஏழு மணி அழைப்பும் நின்று போய் இருந்தது.. என என்னிடம் சகி சொன்னது நினைவுக்கு வந்தது.


ஒரு மாலைப் பொழுதில் சகி என்னிடம் பகிர்ந்து கொண்டது.. மனித மனங்கள் புதிரானவை. அப்படிப்பட்ட மனதுடையவர்கள் தான் சகியும் அவளது தோழன் அருணும்..


"இரு திசை பறவைகள் இவை.."


இருவருக்கும் காதல் மலரும் பருவம் இல்லை என்றாலும் வயதைக் கடந்து ஏனோ பிடித்திருந்தது... ஏன் பிடித்தது என்பது இருவருக்குமே வியப்பானது தான்.. இந்த ஈர்ப்புக்கு மைய புள்ளி கண்ணதாசன்..




அருண் படிப்பில் தங்கப் பதக்கம் வாங்கியவர்.. அவர் வசிக்கும் ஊரில் சிறந்த ஆளுமை என்று பெயர் வாங்கியவர் ..சகியும் அவருக்கு சளைத்தவள் இல்லை. இருவரும் தூரத்து  உறவினர்கள்..


ஒரு நிகழ்ச்சியில் பேசிக்கொண்ட போது அங்கே இலக்கியமும் இனிமையும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.. அன்றிலிருந்து அவர்களின் ரசனை பகிர்வு ஃபோனிலும் வாட்ஸ் அப்பிலும் தொடர்ந்தது.


இனிமையான பொழுதுகள் அவை அவர்கள் இருவருக்கும். கண்ணதாசனை பற்றி பேச ஆரம்பித்து விட்டால் மணி கணக்கில் பேசிக் கொண்டிருப்பதை அவர்களே மறந்து விடுவார்கள்..... அருண் பாடலின் முதல் இரண்டு வரிகளை சொல்ல சகி மீதி வரிகளை பாடி விடுவாராம். நல்ல குரல் வளம் சகிக்கு. சிறந்த தமிழ் பற்றாளரும் கூட.. பாடல்களோடு பகிர்ந்து கொள்ள பல விஷயங்கள் இருந்தன . அவர்களின் நட்பு அவர்களுக்கே வியப்பாய் இருந்தது..


எப்படி முகிழ்ந்தது இது என்று இருவரும் ஒருவரை ஒருவர் கேட்டுக்கொள்வார்களாம். "இரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு மனதும் இணைய கண்டோம்" என்று சகி அடிக்கடி பாடுவார்.


அருணின் இயல்பில் ஏற்பட்ட மாற்றங்களை குடும்பம் கவனித்தது, கண்டித்தது.. ஆண் பெண் உறவு என்றாலே அது காமத்திற்காக மட்டுமே காசுக்காக மட்டுமே என்பது தானே எல்லோருக்கும் நினைப்பு ஆனால்..... சகியும் அருணும்  சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பே இல்லை என்பது எல்லோருக்கும் தெரியும்..


60 வயதைக் கடந்த இதய நோயாளியான அருண் தன் குடும்பத்தை தவிர வேறு எங்கேயும் தனியாக பயணம் செய்ய இயலாது என்பது குடும்பத்தினர் அனைவருக்கும் தெரிந்திருந்தாலும் சகியோடு அவர் பேசுவதை அவர்களால் சகித்துக் கொள்ள இயலவில்லை ..


அருணும் சகியும் " இரு திசை பறவைகள்" அவை என்றும் ஒன்று சேரப் போவதில்லை என்று தெரிந்திருந்தாலும் அருண் சகியோடு பேசும் வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. 


சகிக்கு பொருளாதார நெருக்கடி என்று எதுவும் இல்லை ..தனிமை வாழ்க்கை.  மனம் விட்டு பேச ஆட்கள் இல்லை என்பது அருணுக்கு தெரியும்.


அருணின் பரந்துபட்ட அறிவு சகிக்கு ஆச்சரியத்தையும் அவர் மீது அன்பையும் அதிகரிக்க செய்தது. வளர்ந்த பிள்ளைகள் அவரவர் குடும்பத்தை கவனித்தனர்..  கணவர் இன்றி இருந்த சகிக்கு பேச ஒரு ஆள் கிடைத்ததும் ஆகாயத்தில் மிதந்தார்.


நான் அவரை பணத்துக்காகவோ வேறு எதற்காகவோ டிஸ்டர்ப் பண்ணவில்லையே பேசிக்கொண்டு மட்டும் தானே இருக்கிறேன், ஏன் அவரை என்னிடம் பேச அனுமதிக்க மறுக்கிறார்கள் என சகி மருகிய நாட்கள் பல...


இருப்பினும் அருணும் சகியும் தங்கள் ரசனைகளை பரிமாறிக் கொள்ள இரு திசைகளிலும் மனதால் பறவைகளாக பறந்து கொண்டு தான் இருக்கின்றனர்... இப்படியும்  சிலர் இருக்கத்தான் செய்கின்றனர்.. இவர்கள் ரசனை மிகுந்த  காதலர்கள்.


(ஷீலா ராஜன் அடிப்படையில் ஒரு ஆசிரியை. கடலூர் புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியையாக பணியாற்றியவர். தமிழக அரசின் எண்ணும் எழுத்தும் ஆங்கில  குழுவில் இடம் பெற்றுள்ளார்.  4 மற்றும் 5ம் வகுப்புகளுக்கான காணொலிகளில் பின்னணி குரல் கொடுத்துள்ளார். திருவண்ணாமலை ரத்னா செந்தில்குமார் தலைமையிலான தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டுத் தமிழ்ச் சங்கம் நடத்திய புறநானூறு உலக சாதனையிலும் திருக்குறளுக்கான கதை எழுதும் உலக சாதனை நிகழ்வில் பங்கேறுள்ளார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்

news

தீபாவளி தீபாவளி.. சூப்பரா காஜு கத்திலி செய்வோம்.. ஸ்வீட்டா பண்டிகையை கொண்டாடுவோம்

news

வாழ்க்கையின் பக்கங்கள்!

news

10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!

news

நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்

news

சமந்தா, தமன்னா, ரகுல் ப்ரீத் சிங் பெயரில் டுபாக்கூர் வாக்காளர் பட்டியல்.. களத்தில் குதித்த காவல்துறை

news

பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்

news

என்னாது.. மீண்டும் சுந்தர் சியுடன் கை கோர்க்கப் போகிறாரா.. ரஜினிகாந்த்?

news

ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்