ரூ. 100 கோடியைத் தாண்ட தடுமாறும் தக்லைப்.. கர்நாடக குழப்பத்தால் ஏற்பட்ட ரூ. 30 கோடி நஷ்டம்!

Jun 23, 2025,04:19 PM IST

சென்னை : மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு நடித்த "Thug Life" திரைப்படம் ஜூன் 5-ம் தேதி வெளியானது. இப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாமல், ரிலீசாகி ஒரு மாதம் ஆகி விட்ட போதும் 100 கோடி ரூபாய் வசூலை எட்ட முடியாமல் தவிக்கிறது. 


படம் குறித்த நெகட்டிவ் விமர்சனங்களும், பேச்சுகளும் இதற்கு ஒரு முக்கியக் காரணம். மேலும் படம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் போனது இன்னொரு குழப்பம். அதேசமயம், கர்நாடகத்திலும் படம் ஒரே நேரத்தில் ரிலீஸாகவில்லை. இதனால் கர்நாடகத்தில் இப்படத்திற்கு ரூ. 30 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.




சென்னையில் நடந்த தக்லைப் பட விழாவில், கமல்ஹாசன் பேசும் போது, "சிவரராஜ்குமார் இன்னொரு மாநிலத்தில் இருக்கும் என் குடும்பம். அதனால் தான் அவர் இங்கே இருக்கிறார். நான் பேச ஆரம்பித்ததும், 'என் வாழ்க்கையும் என் குடும்பமும் தமிழ் தான்' என்று சொன்னேன். உங்கள் மொழி (கன்னடம்) தமிழில் இருந்து பிறந்தது. அதனால் நீங்களும் அந்த வரியில் அடங்குவீர்கள்" என்றார். இந்த கருத்துக்கு கர்நாடகாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால், கர்நாடகாவில் படத்துக்கு தடை விதிக்கப்பட்டது. 


இதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை போய் கமல்ஹாசன் தடையை நீக்கியுள்ளார். இதனால் படம் கர்நாடகாவில் ரிலீஸாக வழி பிறந்துள்ளது. ஆனால் இத்தனை நாட்கள் கழித்துப் படத்தைப் போடுவதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை என்று தியேட்டர் உரிமையாளர்கள் கூறுகிறார்களாம்.  படம் வெளியாகி பலராலும் அது பார்க்கப்பட்டு விட்ட நிலையில் இனி அப்படத்தைப் போட்டாலும் ஒரு லாபமும் இருக்காது என்பது தியேட்டர்காரர்களின் கருத்தாகும்.


"Thug Life" திரைப்படம் ரங்கராய சக்திவேல் என்ற குற்றவாளியின் கதையை பற்றியதாகும். அவர் தன்னை ஏமாற்றியவர்களை பழிவாங்க நினைக்கிறார். அவரது நண்பர் அமரனும், மற்ற கும்பல் உறுப்பினர்களும் இதில் அடங்குவர். இந்த கேங்ஸ்டர் படம் அதிகாரப் போட்டி பற்றியும் காட்டுகிறது. சக்திவேல் தன் எதிரிகளின் நகர்வுகளை கவனித்து அவர்களை எதிர்கொள்கிறார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தொடர் மழையால் காவிரி டெல்டா விவசாயிகளுக்கு இரட்டை இடி:ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும்:அன்புமணி

news

அதிரடியாக குறைந்தது தங்கம் விலை... இன்று மட்டும் சவரனுக்கு ரூ.2400 குறைவு!

news

மகாலட்சுமி முகம் கொண்ட மங்கலா.. மீண்டும் மங்கலம் (5)

news

குருவிக்கூடு!

news

காற்றின் மொழி!

news

அரபிக் கடல்.. வங்கக் கடல்.. 2 தாழ்வுகள்.. லேட்டஸ்ட் நிலவரம் என்ன.. மழை எப்படி இருக்கும்?

news

இருபுறமும் காய்ந்த நிலை ஊடே மலர்வனம்…சீழ்க்கை கவிதைப் புத்தக விமர்சனம்

news

கந்தன் அருள் இருந்தால் துன்பம்.. வந்த வழி ஓடி விடும்.. கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்!

news

கன மழை எதிரொலி.. சென்னை உள்பட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.. புதுவையிலும் விடுமுறை அறிவிப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்