வாஷிங்டன்: அமெரிக்கா முழுவதும் டிக்டாக் செயலி தனது சேவையை நிறுத்தி விட்டது. அந்த நாட்டு அரசு விதித்த தடைக்கு உச்சநீதிமன்றம் பச்சைக் கொடி காட்டியதால் இன்று முதல் டிக்டாக்கின் அமெரிக்க சேவை நிறுத்தப்படுகிறது.
சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமானது டிக்டாக். இந்த செயலிக்கு உலகம் முழுவதும் நல்ல கிராக்கி உள்ளது. ஆனால் இந்த செயலியை தற்போது ஒவ்வொரு நாடாக தடை செய்து வருகின்றன. இந்த செயலி மூலமாக சீனா உளவு பார்ப்பதாக பொதுவான புகார் உள்ளது.
இந்தியா டிக்டாக் செயலிக்கு தடை விதித்துள்ளது. இதனால் இந்தியாவில் தற்போது டிக்டாக் செயலி செயல்பாட்டில் இல்லை. அதேபோல அமெரிக்காவும் இந்த செயலிக்குத் தடை விதித்தது. இதை எதிர்த்து பைட்டான்ஸ் நிறுவனம் அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துத. அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், அமெரிக்க அரசு விதித்த தடை சரியானதே என்று தீர்ப்பளித்தது.
இதனால் டிக்டாக் நிறுவனம் தனது செயல்பாடுகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்று முதல் தடை உத்தரவு அமலுக்கு வருவதால் தற்போது டிக்டாக்கின் அமெரிக்க செயல்பாடுகள் நிறுத்தப்பட்டு விட்டன. அமெரிக்க பயனாளர்கள், கூகுள் பிளே ஸ்டோர் மூலம் டிக்டாக்கை தரவிறக்கம் செய்வதும் நிறுத்தப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரிலிருந்தும் டிக்டாக் நீக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 179 மில்லியன் அமெரிக்கர்கள் டிக்டாக்கைப் பயன்படுத்தி வந்தனர் என்பது நினவிருக்கலாம்.
இதற்கிடையே, தான் அதிபர் பதவியேற்றதும் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு 90 நாள் அவகாசம் தருவதாகவும், அந்தக் காலகட்டத்துக்குள் பைட்டான்ஸ் நிறுவனம், அமெரிக்க அரசின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் டிக்டாக் தடை விலக வாய்ப்புள்ளதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனால் டிரம்ப் பதவியேற்றதும் டிக்டாக் தடை விலகுமா என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
டிக்டாக் மட்டுமல்லாமல் பைட்டான்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான வீடியோ எடிட்டிங் ஆப் கேப்கட், சோசியல் ஆப் லெமன்8 ஆகியவையும் கூட கூகுள் பிளேஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.
எங்கெல்லாம் டிக் டாக்குக்குத் தடை உள்ளது?
இந்தியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், கென்யா, அஜர்பைஜான், ஈரான், இந்தோனேசியா, ஜோர்டான், நேபாளம், பாகிஸ்தான், வியட்நாம், தைவான், பிலிப்பைன்ஸ், உஸ்பெக்கிஸ்தான், ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், அல்பேனியா, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து, நார்வே, ரஷ்யா, இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து என உலகின் பல நாடுகளில் இது தடை செய்யப்பட்டுள்ளது.
சீனாவைச் சேர்ந்த நிறுவனமாக இருந்தாலும் கூட சீனாவிலும் ஹாங்காங்கிலும் கூட இது சரிவர செயல்படாது. அதாவது சர்வதேச டிக்டாக் பதிவுப்பை சீனாவில் பார்க்க முடியாது. சீனாவுக்காகவே தனியாக ஒரு வெர்ஷன் உள்ளது. அதை மட்டும்தான் சீனாவிலும் ஹாங்காங்கிலும் பார்க்க , பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
கோவை, நீலகிரிக்கு நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
ஆசிரியர்கள், மாணவர்கள், பத்திரிகையாளர்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் அரசா?: நயினார் நாகேந்திரன்
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்.. சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
கல்விக் கண் திறந்த காமராசர்.. பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் புகழாரம்
இந்திய இஸ்லாமிய மத குருக்களின் முயற்சியால்.. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைப்பு
காற்றில் கலந்தார் கன்னடத்து பைங்கிளி... சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்
வெற்றிகரமாக பூமிக்குத் திரும்பினார் சுபான்ஷு சுக்லா.. ஆக்ஸியம் 4 குழுவினரும் பத்திரமாக திரும்பினர்!
அஜித்குமார் கொலை வழக்கு... காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட ஆஷிஷ் ராவத்திற்கு மீண்டும் பதவி
இந்தியாவுக்கு வந்த டெஸ்லா.. மும்பையில் முதல் ஷோரூம் திறப்பு.. நீங் புக் பண்ணிட்டீங்களா?
{{comments.comment}}