நாம் அன்றாட சமைக்கும் உணவுகளை தூய்மையாக இறைவனுக்கு படைத்து வழிபடுவது நைவேத்தியம் என்கிறோம். அதுவே இறைவனுக்கு படைத்த பிறகு அதை பக்தியுடன் சாப்பிடும் போதும் பிரசாதம் என்கிறோம். அதிலும் ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான உணவுகள் படைத்து வழிபடுவது வழக்கம். அப்படி இறைவனுக்கு படைக்கப்பட்டு நமக்கு கிடைக்கும் அந்த பிரசாதங்களை மக்கள் புனிதமாக கருதுகின்றது. அந்த வரிசையில் திருப்பதி ஏழுமலையானுக்கு படைக்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் புனிதமானது.
திருப்பதி என்றதுமே ஏழுமலையானுக்கு அடுத்த படியாக அனைவருக்கும் நினைவிற்கு வருவது அங்கு கொடுக்கப்படும் லட்டு பிரசாதம் தான். அதுற்கு காரணம் அதன் தனித்துவமான சுவையும், மணமும் தான். லட்டு என்றாலே அனைவருக்கும் பிடித்த ஒன்று. அதிலும் ஏழுமலையானுக்கு படைத்த லட்டு பிரசாதத்தை பிடிக்காதவர்கள் யாராவது இருக்க முடியுமா? அத்துடன் தற்போது புரட்டாசி மாதம் என்பதால் வீட்டிலேயே திருப்பதி லட்டு செய்து, சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு நைய்வேத்தியமாக படைத்து, திருப்பதி ஏழுமலையானின் அருளைப் பெற, லட்டு பிரசாதத்தை எப்படி வீட்டிலேயே ஈசியாக செய்யலாம் என பார்ப்போமா .
முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை, இரண்டு ஸ்பூன் அரிசி மாவு, ஒரு கப் கடலை மாவு, ஒன்றரை கப் பால் சேர்த்து கட்டி இல்லாம கரைத்து வைத்துக் கொள்ளவும்.பின்னர் ஒரு கடாயில் ஒரு கப் நெய் ஊற்றி காய்ந்ததும், பூந்தி கரண்டியில் கரைத்த கடலை மாவு கலவையை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதிக நேரம் வேக வைக்காமல் பதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பூந்தி ஆறியதுடன் அதை ஒரு மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். மறுபுறம் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரை கப் தண்ணீர் ஒரு கப் சர்க்கரையை போட்டு கரைந்ததும், சர்க்கரை பாகு ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க வைத்து அடுப்பை அணைத்து விட வேண்டும். பின்னர் பூந்தி கலவையை பாகு கரைசலில் போட்டு நன்றாக கலந்து 20 நிமிடம் அப்படியே விட வேண்டும். மறுபுறம் ஒரு கடாயில் நெய்யை உற்றி காய்ந்ததும் முந்திரியை நன்றாக வறுக்க வேண்டும்.
பிறகு பூந்தி கலவையில் வறுத்த முந்திரி, அத்துடன் டைமண்ட் கற்கண்டு, தட்டிய ஏலக்காய், சிறிதளவு பச்சை கற்பூரம் சேர்த்து நன்றாக கலந்து, சிறு சிறு உருண்டைகளாக பிடித்தால் திருப்பதி லட்டு ரெடி. இனி திருப்பதி போகாமலேயே ஏழுமலையானின் லட்டு பிரசாதத்தை, அதுவும் வீட்டில் இருந்தே சுவைக்கலாம்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
ஆளுநர்களை வைத்துக் குழப்பம் விளைவித்து என்ன சாதிக்கப் போகிறீர்கள்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
நீலகிரி, கோவைக்கு ஆரஞ்ச் அலர்ட்... சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்: வானிலை மையம்
ஜிஎஸ்டி வரி குறைப்பால் கார், ஏரி, டிவி விற்பனை அதிகரிப்பு: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
கரூர் துயரம் எதிரொலி.. தீபாவளி கொண்டாட வேண்டாம்.. தொண்டர்களுக்கு தவெக வேண்டுகோள்
எனது பெயரில் நற்பணி மன்றம் தொடங்க வேண்டாம்.. விட்ருங்க.. அண்ணாமலை கோரிக்கை
திமுக அரசுக்கு நிதி நிர்வாகமே தெரியவில்லை..பாமக கூறி வந்த குற்றச்சாட்டு உறுதியாகியுள்ளது: அன்புமணி
10 கிராம் தங்கத்தோட விலை என்ன தெரியுமா.. தீபாவளியையொட்டி வச்சு செய்யும் நகை விலை!
நிதீஷ் குமார் நிச்சயம் முதல்வராக மாட்டார்.. பாஜக முடிவெடுத்து விட்டது.. சொல்கிறது காங்கிரஸ்
பாகிஸ்தான், இலங்கையுடனான முத்தரப்புத் தொடர்.. திடீரென விலகியது ஆப்கானிஸ்தான்
{{comments.comment}}