டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் ரிலீஸ்.. 9491 பேருக்கு அப்பாயின்ட்மென்ட் ஆர்டர் வரப் போகுது!

Oct 28, 2024,04:28 PM IST

சென்னை: 2024 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் கடந்த ஜூன் 9ஆம் தேதி நடைபெற்ற நிலையில் இன்று தேர்வு முடிவுகள்  வெளியாகி உள்ளது.


தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு துறையில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிசி குரூப் தேர்வு மூலம் போட்டி தேர்வுகள் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அரசு துறைகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வு கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடத்தப்பட்டது. 




இந்த தேர்விற்கு 20 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்த நிலையில் 15.88 லட்சம் பேர் எழுதினர். குரூப் 4 தேர்வில் ஏற்கனவே 6,244 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில்,முதலில் 480 காலிப்பணியிடங்களும், இரண்டாம் முறை 2,208 காலிப்பணியிடங்கள் கூடுதலாக  அதிகரிக்கப்பட்டு மொத்தம் 8,932 காலிப்பணியிடங்களில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இதையடுத்து மேலும் 559 காலிப் பணியிடங்கள் அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9491 பேர் வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.


காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான தகுதியானவர்கள் யார்  என்பது தொடர்பான அறிவிப்புகளை பார்க்க கீழ்கண்ட விபரங்களை பின்தொடரவும்,


முதலில் https://tnpscresults.tn.gov.in/ மற்றும் https://www.tnpsc.gov.in/ ஆகிய வெப்சைட் உள்ளே நுழைய வேண்டும். 

அதில் தேர்வர்களின் பதிவு எண் மற்றும் பிறந்த நாள் ஆகிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும். பிறகு நாம் உள்ளிட்ட விவரங்கள் திரையில் தெரியும். தொடர்ந்து Capcha உள்ளிட்டு Submit கொடுக்கவும். இதனைத்தொடர்ந்து, தேர்வு முடிவுகள் திரையில் தெரியும். அதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்