சென்னை: கடந்த ஐந்து ஆண்டுகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு (TNSTC) எந்த நிதியுதவியும் அளிக்கவில்லை என, திமுக எம்.பி. கிரிராஜன் எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசின் சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி பதிலளித்துள்ளார்.
தேசிய எலக்ட்ரிக் பஸ் திட்டம் (NEBP) தொடர்பாக திமுக எம்.பி. ஆர்.கிரிராஜன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
50,000 மின்சார வாகனங்களைப் பயன்படுத்த கன்வெர்ஜென்ஸ் எனர்ஜி சர்வீசஸ் லிமிடெட் (CESL) அமைப்பை ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளதா, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மின்சாரப் பேருந்துகளின் விவரங்கள் குறித்து கிரிராஜன் கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் நிதின் கட்காரி, 13.05.2022ல் நிதி ஆயோக் கடிதத்தின் படி அந்த பணியை முடிக்க CESLக்கு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மின்சார வாகனங்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக PM-eBus சேவா மற்றும் PM e-Drive போன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், மாநில போக்குவரத்து கழகங்கள் இந்த உதவிக்காக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் அல்லது கனரக தொழில்கள் அமைச்சகத்திற்கு முன்மொழிவுகளை அனுப்பலாம் என பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒன்றிய அரசு நிதி உதவி ஏதும் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதா என்ற இன்னொரு கேள்விக்கு அமைச்சர் நிதின் கட்காரி பதிலளிக்கையில், TNSTC-க்கு கடந்த 5 ஆண்டுகளில் நிதியுதவியாக எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. நாடு முழுவதும் அரசு, தனியார் மற்றும் கல்வி நிறுவனங்களால் 10677 மின்சார பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cyclone Montha effect: திருவள்ளூருக்கு ஆரஞ்சு... சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்!
2026 தேர்தலிலும் திமுக.,வுக்கு தான் வெற்றி...முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
வாக்குரிமைப் பறிப்பைத் தடுப்போம்... வாக்குத் திருட்டை முறியடிப்போம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் அரசு...திமுக மீது விஜய் தாக்கு
ஷ்ரேயாஸ் ஐயருக்கு என்ன தான் ஆச்சு?...குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்
இயற்கை வளங்களை அழித்து மணல் கொள்ளையை அரங்கேற்ற துடிக்கும் திமுக அரசு: அன்புமணி காட்டம்!
மோன்தா புயல் தீவிரம்... ஆந்திராவில் 19 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!
ஒரே நாளில் 30,000 ஊழியர்களை வேலையை விட்டு தூக்கிய அமேசான்
தேர்தலுக்கு தயாராகும் தேர்தல் கமிஷன்...இன்று முதல் பயிற்சி ஆரம்பம்
{{comments.comment}}