கருட பஞ்சமி .. திருமாலுடன் ஆதிசேஷனையும் சேர்த்து வணங்குவோம்.. அருள் பெறுவோம்

Jul 29, 2025,10:46 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


விசுவாசு வருடம் 20 25 ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆடி மாதம் 13 ஆம் நாள் கருட பஞ்சமி அனுஷ்டிக்கப்படுகிறது.


இந்த நாள் திருமாலின் வாகனமான கருடனை வணங்குவதுடன், திருமாலையும் ஆதிசேஷனையும் வழிபடுவதும் வழக்கமாகும் .சில கோவில்களில் கௌரி அம்மனை நாக வடிவில் வழிபடும் வழக்கமும் உள்ளது.


ஜாதகத்தில் ராகு கேது தோஷங்களும் ,சர்ப்ப தோஷங்களும் ,காலசர்ப்ப தோஷங்களும் போன்ற தோஷங்கள் நீங்க இந்த நாள் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானதாகும். கணவன்- மனைவி பிரச்சினைகள் ,குழந்தை பாக்கியம் தாமதம் போன்றவற்றை நீக்க கருட பஞ்சமி வழிபாடு அதீத சிறப்பானது.


காஷ் யபர் மற்றும்  வினதை தம்பதிகளுக்கு கருடன் பிறந்த தினமாக இந்நாள் கருதப்படுகிறது. நாகர்களை வழிபடும் நாக பஞ்சமியும் ,விஷ்ணுவின் வாகனமான கருடனை வழிபடும் கருட பஞ்சமியும் ஆடி மாத வளர்பிறை பஞ்சமி யான இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.




கடுமையான சூழ்ச்சியின் காரணமாக கருடனின் தாயார் வினதை நாகர்களிடம் அடிமையாக இருந்தார் தன் தாயை மீட்பதற்காக தேவர்களிடம் கருடன் போரிட வேண்டியதாயிற்று. தேவர்களிடமிருந்து அமிர்த கலசத்தை பெற்று தன் தாயை மீட்டு அமிர்தத்தை கொண்டு வந்த நாள் தான் கருட பஞ்சமியாக  அனுஷ்டிக்கப்படுகிறது. கருட பஞ்சமி நாளில் கருடனின் கதை கேட்டாலே அனைத்து தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம். தன் தாயை மீட்க கருடன் காட்டிய அளவற்ற பாசத்தைக் கண்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு கருடனை தனது வாகனமாக  ஏற்றுக்கொண்டு பெருமைப்படுத்தினார்.


பெருமாள் கோவில்களில் இருக்கும் கருட  பகவானை தரிசிப்பது மிகவும் விசேஷமானதாகும். இந்த நாளில் விரதம் இருந்து கருடனை வணங்கினால் கருடனைப் போல பலசாலியாகவும், அறிவு நிறைந்தும் பிள்ளைகள் பிறப்பார்கள் என்பது நம்பிக்கை.


இந்த நாளில் திருப்பதி, காஞ்சி ,நாகர்கோயில், அண்ணாமலை, சுசீந்திரம் போன்ற திருத்தலங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன . கருடன் சன்னதியில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறுகிறது .கருட பகவான் விஷ்ணுவின் வாகனமாக விளங்கும் ஒரு தெய்வீக பறவை .அவர் நாகங்களை தங்கள் பகைவராக கொண்டவர். வைஷ்ணவர்களால் மிகவும் போற்றப்படும் தெய்வமாகவும் ,தீய சக்திகளை அழிக்க வல்லவராகவும் உள்ளவர் கருடன்.


பஞ்சமிதிதி  யான இன்று அனைவரும் கருட பகவானை தரிசித்து நல்வாழ்வு வாழ்வோமாக. மேலும் தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன் .வரைந்து எழுதியவர் உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரூ.1 லட்சத்தை தாண்டியது தங்கம் விலை... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்கள்!

news

ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும் தேங்காயின் மருத்துவ மகத்துவம்!

news

சர்வதேச தேநீர் தினம்.. சூடா ஒரு டீ சாப்பிட்டுட்டே பேசலாமா பிரண்ட்ஸ்!

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!

news

மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?

news

கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

அதிகம் பார்க்கும் செய்திகள்