- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: இன்று 25 மாசி முதல் தேதி விஷ்ணுபதி புண்ணிய காலம்.
அது என்ன விஷ்ணு புண்ணிய காலம்?
விஷ்ணுபதி புண்ணிய காலம் பகவான் விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனிதமான காலமாகும். நமது இந்து நாட்காட்டியில் ஒரு வருடத்தில் நான்கு முறை விஷ்ணுபதி புண்ணிய காலம் அனுஷ்டிக்கப்படுகிறது. வைகாசி முதல் நாள், ஆவணி முதல் நாள் கார்த்திகை முதல் நாள், மாசி முதல் நாள், விஷ்ணுபதி புண்ணிய காலமாக அனுஷ்டிக்கப்படுகிறது.
நேரம்:

விஷ்ணுபதி புண்ணிய காலம் தை மாதம் கடைசி நாள் பிப்ரவரி 12 புதன் அன்று 1:30 மணி துவங்கி 13ஆம் தேதி வியாழன் காலை 10:30 மணிக்கு முடிகிறது.
விஷ்ணுபதி புண்ணிய காலம் என்பது விஷ்ணுவின் கடுமையான அவதாரமான நரசிம்மரை லக்ஷ்மி தேவி அமைதி படுத்திய தருணத்தை நினைவு கூறுகிறது. நரசிம்மர் ஹிரண்ய கசிபு என்கிற அசுர மன்னனை கொன்ற பிறகு மிகவும் கோபமாக இருந்தார். அவரின் கோபத்தை லட்சுமி தேவி தலையிட்டு அமைதி அடைய செய்து லட்சுமி நரசிம்மராக மாற்றினார் .இந்த தெய்வீக தருணம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று கொண்டாடப்படுகிறது.
இந்நேரத்தில் விஷ்ணுவின் கருணையும் ஆசிகளும் மிகுதியாக இருக்கும் இந்த புண்ணிய காலத்தில் விஷ்ணுவை வழிபடவும் அவரின் ஆசி பெறவும் உகந்த காலம் அதிகாலை எழுந்து குளித்து சுத்தமான ஆடை அணிந்து அருகில் உள்ள விஷ்ணு கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம் .27 பூக்கள் துளசி மாலை ஏந்திக்கொண்டு கோவிலை அல்லது கொடிமரம் அல்லது கருடாழ்வாரை 27 முறை சுற்றி வருவது நம் வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லி ஒவ்வொரு முறை சுற்றி வரும் போது ஒவ்வொரு பூக்களாக வைத்து வழிபாடு செய்யலாம். நம்மால் இயன்றவரை தான தர்மங்கள் செய்வது சாலச் சிறந்தது.
விஷ்ணு புண்ணிய காலத்தன்று சொல்ல வேண்டிய மந்திரம்:
விஷ்ணு காயத்ரி
நாராயணாய வித்மஹே வாசுதேவாய தீமஹி/ தன்னோ விஷ்ணு பிரசோதயாத்//
கருடன் காயத்ரி
ஓம் தத்புருஷாய வித்மஹே ஸ்வர்ண பக்ஷாய தீமஹி /தன்னோ கருட :பிரசோதயாத்//
அனைவரும் ஸ்ரீனிவாசா கோவிந்தா ஸ்ரீ வெங்கடேசா கோவிந்தா நாராயணா என்று ஒவ்வொரு முறை கோவிலை சுற்றி வரும் பொழுது கூறி வழிபட மிகவும் உகந்த நாள் இந்த விஷ்ணுபதி புண்ணிய காலம். அனைவரும் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று வாழ்வோமாக.
பாஞ்சராத்திர தீபத்தின் முக்கியத்துவம் என்ன.. அதை ஏற்றுவது ஏன்?
தங்கம் விலை நேற்று உயர்ந்த நிலையில் இன்று குறைவு... அதுவும் சவரனுக்கு ரூ.320 குறைவு
செல்லமாக வளர்ப்பது தவறில்லை.. செல்லாத செல்வங்களாய் வளர்க்கலாமோ!?
திமுக.,வுடன் பேச்சுவார்த்தை நடத்திய காங்கிரஸ் ஐவர் குழு...பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?
ஓபிஎஸ் டெல்லி விசிட்...பாஜக., தலைவர்களுடன் சந்திப்பு...டெல்லியில் என்ன நடக்கிறது?
அவசரப்பட்டு துணியை துவைச்சிராதீங்க.. இன்னும் முடியல.. மழை தொடரும்...இந்திய வானிலை மையம் தகவல்!
ரஷ்ய அதிபரின் டெல்லி வருகை...தாறுமாறாக ஏறிய ஹோட்டல் கட்டணங்கள்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 04, 2025... இன்று நம்பிக்கை அதிகரிக்கும் நாள்
தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் உடல் நலக்குறைவால் காலமானார்
{{comments.comment}}