- ஸ்வர்ணலட்சுமி
புரட்டாசி தேய்பிறை அஷ்டமி : 2025 அக்டோபர் மாதம் 13ஆம் தேதி திங்கட்கிழமை தேய்பிறை அஷ்டமி நாள் அமைந்துள்ளது. பணப் பிரச்சனைகள், கடன் தொல்லைகள் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் தடைகள் நீங்கும். காலபைரவரை வழிபட வாழ்க்கை சீராகவும், மகிழ்ச்சியாகவும் மாறும்.
நேரம்: அக்டோபர் 13ஆம் தேதி திங்கட்கிழமை 12 :24 PM முதல் 14ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 11 :10 AM வரை அஷ்டமி திதி உள்ளது.
பைரவர் செல்வத்தின் தெய்வமாக போற்றப்படுபவர்.அவரை வழிபாடு செய்பவர்களுக்கு தங்கள் தொழில்,வியாபாரம் போன்றவற்றில் ஏற்படும் சிக்கல்களை நீக்குபவர். நிலையான வருமானம் அருள் பவர். வாழ்க்கையில் செல்வ செழிப்பை பக்தர்கள் அடைவார்கள் என்பது நம்பிக்கை. பைரவரை வழிபாடு செய்ய உடல் ஆரோக்கியம் மேம்படும். என்பது நம் முன்னோர்களின் நம்பிக்கை அவரை வழிபடுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தில் குறைகள் இருப்பின் அகலும் என்பது ஐதீகம். வாழ்க்கையில் ஏற்படும் அனைத்து துன்பங்களையும் நீக்கி, நன்மைகளை தரும் தெய்வம் பைரவர் ஆவார்.
வழிபடும் நேரம்:
சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு அனைத்து சிவாலயங்களிலும் பைரவருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். அங்க நடைபெறும் பைரவா அபிஷேகத்தில் கலந்து கொண்டு அபிஷேகப் பொருட்களை வாங்கி சென்று வழிபாடு செய்வது சிறப்பு. வீட்டிலும் பைரவர் படத்திற்கு முன் நெய் தீபம் ஏற்றி,செவ்வரளி மலர்கள், வடை மாலை, ஆகியவற்றைச் சாற்றி மிளகு கலந்த அன்னம் அல்லது தயிர் சாதத்தை நைவத்தியமாக படைத்து வழிபாடுகள் செய்ய சிரமங்கள் குறையும். பைரவர் மந்திரங்களை படிப்பதும்,காயத்ரி மந்திரத்தையும் ஜெபிப்பதும் சிறப்பு.
தேய்பிறை அஷ்டமியில் காலபைரவர் வழிபாடு செய்வதனால் பல பிறவி பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.மேலும் குடும்ப பிரச்சினைகள் தீரும். கடன் சுமை அதிகமாக இருப்பவர்கள் தொடர்ந்து பைரவர் வழிபாடு செய்வதனால் அதிலிருந்து விடுபட்டு லட்சுமி கடாட்சம் பெற்று செல்வம் பெருகும். குடும்பத்தில் தம்பதியர் இடையே பிரச்சனைகள் இருப்பின் மனக்குழப்பங்கள் நீங்கி ஒற்றுமை ஏற்படும். மாணவர்கள் கல்வியில் முன்னேற்றம் மற்றும் மேன்மையை அடைவர்.
அஷ்டமி அன்று தங்களால் இயன்ற தானம் செய்வது மிகவும் சிறந்ததாகும்.
அஷ்டமி திதியில் தவிர்க்க வேண்டியவை :
பெரும்பாலும் அஷ்டமியில் புதிய சொத்து வாங்குதல்,வாகனம் வாங்குதல்,புது வீடு கிரகப்பிரவேசம், திருமணம் போன்ற சுப காரியங்கள் தொடங்குவதை தவிர்ப்பார்கள். மேலும் திருமண தடை, காரியத்தடை நீங்கி வாழ்வு வளம் பெறும்.எந்த ஒரு காரியத்தையும் மனதார முழு நம்பிக்கையுடன் செய்வது வாழ்க்கையின் முன்னேற்ற பாதைக்கு வழிவகுக்கும். இன்று கால பைரவர் அருள் பெற்று அனைவரும் நல்வாழ்வு வாழ்வோமாக.
இன்று திருமண நாள் மற்றும் பிறந்தநாள் கொண்டாடும் அனைவருக்கும் தென் தமிழ் சார்பாக வாழ்த்துக்கள். இது போன்ற தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன். வரைந்து எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி.
ஜெயிலர் 2.. பிரமாண்ட ஆக்ஷன் திருவிழா.. ரஜினியுடன் இன்னொரு விருந்தும் ரெடியாகப் போகுதாம்!
என்னை விட்ருங்க... நான் விலகிக்கிறேன்.. சதானந்தன் மாஸ்டரை அமைச்சராக்குங்க.. சுரேஷ் கோபி
என்னய்யா இது... நகை வாங்குறதா வேணாமா?... நகை விலை உயர்வு குறித்து புலம்பி வரும் வாடிக்கையாளர்கள்
போலி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதா.. தனியாக விசாரிப்போம்.. உச்சநீதிமன்றம் அறிவிப்பு
கரூர் சம்பவ வழக்கை சிபிஐ விசாரிக்கும்.. 3 பேர் கொண்ட கண்காணிப்புக் குழு.. .சுப்ரீம் கோர்ட் உத்தரவு
ஜப்பானை உலுக்கும் திடீர் காய்ச்சல்.. 4000 பேர் பாதிப்பு.. தொற்றுநோயாக அறிவித்தது அரசு!
குழந்தைகள் உயிரைப் பறித்த இருமல் மருந்து.. தயாரிப்பு நிறுவன உரிமையாளர் வீட்டில் இடி ரெய்டு
புரட்டாசி தேய்பிறை அஷ்டமி.. பணப் பிரச்சினை தீரும்.. கடன் தொல்லை நீங்கும்.. மகிழ்ச்சி அதிகரிக்கும்
கோயம்பத்தூரில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் கோர விபத்து.. 3 பேர் பலி
{{comments.comment}}