சென்னை: தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுகள் நாளை நடைபெறுவதையொட்டி விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை.
தமிழகத்தில் நாளை குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடைபெற உள்ளது. இத்தேர்வினை 7 லட்சத்து 93 ஆயிரத்து 966 பேர் எழுத உள்ளனர்.இத்தேர்வு சுமார் 2763 மையங்களில் காலை 9 மணிக்கு தேர்வு தொடங்குகிறது. இத்தேர்வுக்காக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர்கள், தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், மாவட்ட வருவாய் அலுவலர்கள் இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்கள். தேர்வின் போது பறக்கும் படையின் மூலம் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்களின் பாதுகாப்பிற்காக அனைத்து தேர்வு மையங்களிலும் காவலர்க் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இத்தேர்வினை எழுதுபவர்கள் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வுக்கூடத்திற்கு வர வேண்டும். தேர்வர்கள் 9 மணிக்கு மேல் வந்தால் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் உள்ள முக்கிய அறிவுரைகள் மற்றும் தேர்வாணைய இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள், வினாத்தாள் மற்றும் விடைத்தாளில் குறிப்பிட்டுள்ள அனைத்து அறிவுரைகளையும் முறையாக பின்பற்றுமாறும், அதில் குறிப்பட்டுள்ள தடை செய்யப்பட்ட மின்னணு சாதனங்கள் மற்றும் வேறு வகையான எந்த ஒரு சாதனங்களையும் கொண்டு செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்த தேர்வு மையங்கள் குறிப்பாக பள்ளிகளில் தான் நடைபெறும் என்பதால், நாளை தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் பொது விடுமுறை அறிவித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடுமுறை விவரத்தை பள்ளிகளுக்கு தெரிவித்திட அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல். 2024-2025 கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தைச் சுட்டிக்காட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Cauvery River water Issue: காவிரி நீர் பிரச்சனை எப்போது துவங்கியது? .. இதற்கு என்ன தான் தீர்வு?
முதல்வர் விஜய் கர்நாடகா வர வேண்டாம் : கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்
டாஸ்மாக் ஊழல் வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன்...கைது செய்யவும் தடை
மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!
வருமான வரி தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்...தவறவிட்டால் அபராதம்
காவல் நிலையத்தில் ஆஜராவதில் இருந்து 6 நாட்கள் விலக்கு கோரி செந்தில் பாலாஜி மனு
2027 ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட்: 3 நாடுகளின் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறும்
ஜெர்மனியில் கடும் வெப்ப அலை: பலியானோர் எண்ணிக்கை 10,000 ஆக உயர்வு!
மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!
{{comments.comment}}