அரசு அனுமதியுடன் வனங்களில் இனி மரம் வெட்டலாம்.. வந்தாச்சு மலைத்தளம் ஆப்!

Mar 13, 2025,10:21 AM IST

சென்னை: காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் சட்ட விரோதமாக மரம் வெட்டுவதை தடுக்க, குறிப்பிட்ட பகுதிகளில் அரசு அனுமதியுடன் மரம் வெட்ட மலைத்தளம் என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளது தமிழ்நாடு வனத்துறை.


நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நாளுக்கு நாள் மனிதனின் அன்றாட தேவைகளும் அதிகரித்து காணப்படுகிறது. அதாவது மனிதன் சொகுசாக வாழ்வதற்காக காடுகளை அழித்து அதன் நிலங்களை கையகப்படுத்தி  தொழிற்சாலைகள், மாடமாளிகைகள், அமைத்து தனது வாழ்க்கை வட்டத்தை விரிவுபடுத்துகிறான். இப்படி ஒவ்வொரு மனிதனும் தனது சுயநலத்திற்காக மரங்களை வெட்டி காடுகளை அழிப்பதால் எவ்வளவு தீங்கு ஏற்படுகிறது தெரியுமா..?


மரங்கள் வெட்டப்படுவதால் சுற்றுசூழல் சீர்கேடு, பல்லுயிர் பெருக்கம் குறைவு, காட்டுத்தீ, மண் அரிப்பு மற்றும் வறட்சி போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது மட்டுமல்லாமல் மனிதன் பணம் சம்பாதிக்க வேண்டி, காடுகள் மற்றும் மலைப் பகுதிகளில் உள்ள மரங்கள் வெட்டப்பட்டு அதன் பாகங்கள் மூலம் பல்வேறு விலை உயர்ந்த பொருட்களாக உருவாக்கப்படுகிறது. இப்படி கொஞ்சம் கொஞ்சமாக காடுகள் மற்றும் மலை சார்ந்த இடங்களும் அழிக்கப்பட்டு நிலங்களை  ஆக்கிரமித்து வருகின்றனர்.




அதே சமயத்தில் எவ்வித அனுமதியும் இல்லாமல் சட்டவிரோதமாக மலைப்பகுதிகளில்  உள்ள மரங்களையும் வெட்டி எடுத்துச் சென்று குறுக்கு வழியில் பொருளீட்டுகின்றனர். இதனை தடுக்க தான் தமிழக வனத்துறை மலைப்பகுதிகளில் தீங்கு விளைவிக்கும் காடழிப்பு மற்றும் மண் அரிப்பில் இருந்து பாதுகாக்க கடந்த 1955 ஆம் ஆண்டு மரங்களை பாதுகாத்தல் சட்டம் இயற்றப்பட்டது. 


இதன் மூலம் வனப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்ததால் மரங்கள் வெட்ட முடியாது. இதனால் காட்டுக்குள் அனுமதியின்றி தனி நபர்கள் யாரும் உள்ளே நுழைய முடியாது. அந்த வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.  இப்படி தடை செய்யப்பட்ட இடங்களில் தற்போது வனத்துறை  அனுமதியோடு மரங்களை வெட்ட அனுமதி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒரு தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தளத்தில் விண்ணப்பித்தோம் என்றால் இதனை பரிசீலித்து அந்த விண்ணப்பங்கள் சரியானதாக இருந்தால் குறிப்பிட்ட இடங்களில் மரங்களை வெட்ட தமிழ்நாடு வனத்துறை அனுமதி அளிக்கப்படும்.


குறிப்பாக சட்ட விரோதமாக பல்வேறு வழிகளில் மரம் வெட்டுவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சட்டபூர்வமாக  மரங்களை  வெட்ட அனுமதி வாங்கிய பின்னரே மரங்களை வெட்டி பயனடைய தமிழ்நாடு வனத்துறை சிறந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. 


அதாவது தமிழ்நாட்டின் மலைப் பகுதிகளில் உள்ள தனியார் நிலங்களில் மரங்களை வெட்டவும், எடுத்துச் செல்லவும் ஆன்லைன் மூலம் அனுமதி வழங்க மலைத்தளம் (https://www.malaithalam.com/) என்ற இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.


இதன் மூலம் மாவட்ட வன அலுவலர்களிடம் அனுமதி பெற்ற பிறகு விண்ணப்பிக்கலாம். மாவட்ட அளவில் அனுமதிக்கப்பட்ட அதிகாரிகள் குழு இதனை பரிசீலித்து முடிவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

ரயில் டீசல் டேங்கர் வெடித்து தீவிபத்து.. விரிவான விசாரணை நடத்த எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை

news

அஜீத் குமார் மாதிரி.. 24 பேரோட குடும்பத்துக்கும் ஸாரி சொல்லுங்க சிஎம் சார்.. விஜய் ஆவேசப் பேச்சு

news

விஜய் தலைமையில்.. பிரமாண்ட தவெக போராட்டம்.. ஆயிரக்கணக்கில் திரண்ட தொண்டர்கள்!

news

சாமி பட வில்லன் நடிகர்.. கோட்டா சீனிவாச ராவ் காலமானார்.. திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல்

news

Backbenchers இனி கிடையாது.. வகுப்பறைகளில் ப வடிவில் இருக்கைகளை போட தமிழக அரசு உத்தரவு!

news

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.. ராஜ்யசபா எம்.பியாக ஜூலை 25ல் பதவியேற்கிறார்!

news

ஏர் இந்தியா விமான விபத்து.. விமானி வேண்டுமென்றே செய்திருக்கலாம்.. பாதுகாப்பு நிபுணர் பகீர் கருத்து

news

அதிமுக - பாஜக கூட்டணி மாபெரும் வெற்றி பெறும்.. விஜய்யையும் சேர்க்க முயற்சிப்போம்.. அமித்ஷா

news

அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது.. விஜய்யை மறைமுகமாக சுட்டுகிறாரா ரஜினிகாந்த்?

அதிகம் பார்க்கும் செய்திகள்