யானைகளுக்கு ஷவர் பாத்.. ஹய்யா செல்லங்களைப் பாருங்க.. எம்புட்டு ஜாலியா குளிக்கிறாங்கன்னு!

Apr 03, 2024,10:24 AM IST

திருச்சி: தமிழகத்தில் வெப்பச்சலனம் அதிகரித்து வெயில் கொடுமை அதிகரித்துள்ள நிலையில், திருச்சிராப்பள்ளி எம்.ஆர்.பாளையத்தில் உள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகிறது.


தமிழகத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு வெயில் படிப்படியாக உயரும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்த   நிலையில் தற்போது நிலவும் வெயில் தாக்கத்தால் மக்கள் பலரும் தவித்து வருகின்றனர். மக்கள் மட்டுமின்றி பறவைகளும், விலங்குகளும்,   உஷ்ணத்தை தாங்க முடியாமல் அங்கேயும் இங்கேயுமாக அலைந்து திரிகின்றன. 




வனப்பகுதியில் பல உயிரினங்கள் போதிய தண்ணீர், உணவு கிடைக்காமல் திண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் வருட வருடம் வெயில் காலங்களை சமாளிக்க அந்தந்த மாவட்டங்களில் கோவில் யானைகளுக்கு சிறப்பு முகாம் நடத்துவது வழக்கம். இதில் யானைகளுக்கு உடல் மற்றும் உள்ளம் சார்ந்த உளைச்சலைப் போக்கி, அவை ஓய்வு பெறவும், புத்துணர்ச்சி அளிக்கவும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இது மட்டும் இன்றி உரிமை இல்லாத தனியார் யானைகளையும், யானைகள் மறுவாழ்வு மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது.


அப்படிப்பட்ட முகாம் ஒன்று,  திருச்சிராப்பள்ளி எம்.ஆர்.பாளையத்தில் இருக்கிறது. அங்குள்ள யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்தில் யானைகள் வெப்பத்தை சமாளிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ளனர். யானைகளின் உடல் உஷ்ணத்தை குறைக்க வனத்துறையினர் மழை குளியல், மண் குளியல், நீச்சல் குளங்கள் போன்றவற்றை செய்து வருகின்றனர். இந்த யானைகள் முகாமின் மருத்துவரான டாக்டர் கலைவண்ணன் இந்த ஏற்பாடுகள் குறித்துக் கூறும்போது,


எம்.ஆர்.பாளையம் காப்புக்காட்டில் யானைகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு முகாம் நடத்தி வருகிறோம். இந்த முகாமில் இப்போ 11 யானைகள் உள்ளன. இந்த யானைகள் அனைத்துமே உரிமம் இல்லாமல் தனியார்கள் வளர்த்த யானைகள். அவற்றை இங்கு கொண்டு வந்து பராமரிக்கிறோம். 


இந்த முகாமானது 2019 முதல் நடந்து வருகிறது. இங்கு யானைகள் சிறப்பாக பராமரிக்கப்படுகின்றன. யானைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த முகாமில் உள்ளன. கால்நடை மருத்துவர் பரிந்துரைத்தபடி தானியங்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் பிற உணவுகளுடன் தினசரி உணவளிக்கிறோம். 


எங்களிடம் ஒரு கால்நடை மருத்துவர் இருக்கிறார், அவர் ஒவ்வொரு வாரமும்  இங்கு வருவார்.  யானைகளை பரிசோத்து தேவையான ஆலோசனைகளை வழங்குவார் என கூறினார்.


புதிய ஷவர் பாத்தில் யானைகள் சமத்தாகவும், ஜாலியாகவும் குளிப்பது பார்க்கவே கண் கொள்ளாக் காட்சியாக இருக்கிறது. அதேபோல தொட்டியில் நிரப்பப்பட்டுள்ள தண்ணீரை எடுத்து தங்கள் மீது அடித்துக் கொண்டு ஜாலியாகவும் அவை குளிக்கின்றன.

சமீபத்திய செய்திகள்

news

அரசு மரியாதையுடன் நாளை இயக்குநர் பாக்யராஜின் உடல் தகனம்

news

முதல்வர் விஜய், உதயநிதி உட்பட 55 எம்எல்ஏ.,க்களின் வெற்றியை எதிர்த்து வழக்கு

news

அம்பாசமுத்திரம் இடைத்தேர்தல்: பொது வேட்பாளராக சீமான் களம் காண்கிறாரா?

news

திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகல்: பொதுக்குழு கூட்டத்தில் அதிரடி முடிவு!

news

தமிழ் சினிமாவின் ‘திரைக்கதை மன்னன்’ கே. பாக்யராஜ்: முடிவுக்கு வந்த சகாப்தம்

news

இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ் மாரடைப்பால் காலமானார்

news

தமிழக பட்ஜெட் 2026 எப்போது?: முதலமைச்சர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை

news

திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? என்ன மு.க.ஸ்டாலின் இப்படி சொல்லிட்டார்?

news

தூய்மைப் பணிகள் தனியார் மயம்: பலத்த எதிர்ப்பால் டெண்டரை ரத்து செய்தது அரசு!

அதிகம் பார்க்கும் செய்திகள்