திருச்சி: ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் பிரபல ரவுடி அன்பு என்பவரை, ஆறு பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டி கொலை செய்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி ஸ்ரீரங்கம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த அன்பு என்பவர் பிரபல ரவுடி திலீபின் கூட்டாளி என கூறப்படுகிறது. இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.
பிரபல ரவுடி அன்பு ஸ்ரீரங்கம் மேலூர் பகுதியில் உள்ள ஜிம்மிற்கு தினமும் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதன்படியே இன்றைய தினம் ஜிம்மிற்கு சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் பகுதியில் ஆறு பேர் கொண்ட கும்பல் அவரை வழி மறைத்தனர்.

அவர்களை அடையாளம் கண்டு கொண்டு அதிர்ச்சி அடைந்த அன்பு தன்னைக் கொல்ல ஸ்கெட்ச் போட்டு விட்டதை அறிந்து சுதாரித்து அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். ஆனால் அந்தக் கும்பல் விடவில்லை, அன்புவைத் துரத்தினர். ஒரு கட்டத்தில் அன்புவால் ஓட முடியவில்லை. அந்தக் கும்பல் அவரை மடக்கி விட்டது. பின்னர் சரமாரியாக அரிவாளால் வெட்டி படுகொலை செய்தனர். சம்பவ இடத்திலேயே அன்பு பிணமானார்.
இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் .இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பிரச்சார பீரங்கியாக மாறுகிறாரா சரத்குமார்.. யாருக்கு குறி.. தேர்தலில் போட்டியிட விரும்பாதது ஏன்?
Christmas Celebrations: விஜய்யின் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட பேச்சு எப்படி இருந்தது?
2025ம் ஆண்டை அதிர வைத்த கரூர்.. ஷாக் கொடுத்த சார்.. செங்கோட்டையனால் ஷேக் ஆன அதிமுக!
தமிழக பொங்கல் பரிசு எப்போது ? வெளியான செம தகவல்
இதுக்கு ஒரு என்டே இல்லையா?...மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம் விலை
புதிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு
டிசம்பர் 26 வரை தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு...வானிலை மையம் தகவல்
The world of AI.. மனித சிந்தனையின் நவீன வடிவம்.. செயற்கை நுண்ணறிவு
ஏகநாஞ்சேரி என்றொரு கிராமம்!
{{comments.comment}}