அண்ணாமலை பொய் பிம்பம்.. விரைவில் உடையும்.. திருச்சி சூர்யா திடீர் டிவீட்!

Jul 30, 2023,11:30 AM IST
சென்னை: பாஜகவை விட்டு வெளியேறி விட்ட திருச்சி சூர்யா பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து போட்டுள்ள டிவீட் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

திமுக எம்பி திருச்சி சிவாவின் மகன்தான் சூர்யா சிவா. இவர் தனது தந்தை வழியில் திமுகவில் தீவிரமாக இறங்கமாமல் பாஜக பக்கம் போனவர். பாஜகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த இவர் மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ரசிகராகவே மாறி அவருக்காக தீவிரமாக குரல் கொடுத்து வந்தார்.

எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது, இவருக்கும்,  சிறுபான்மைப் பிரிவு செயலாளர் டெய்சிக்கும் இடையே நடந்த தொலைபேசி உரையாடல் வெளியாகும் வரை. அந்த உரையாடலில் திருச்சி சூர்யா சிவா பேசிய பேச்சு பெரும் பரபரப்பையும், முகச் சுளிப்பையும் ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி முன்பு இருவரும் ஆஜராகி விளக்கமும் அளித்தனர்.



இதைத் தொடர்ந்து பின்னர் கட்சியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டார். பிறகு அவரே கட்சியை விட்டு வெளியேறி வந்து விட்டார். வெளியேறி வந்த பின்னரும் கூட அண்ணாமலைக்கு ஆதரவாகத்தான் நடந்து வந்தார் சூர்யா சிவா.  அதாவது ஜூன் 4ம் தேதி வரை அண்ணாமலைக்கு ஆதரவாகத்தான் இருந்து வந்தார் சூர்யா சிவா. அன்று அண்ணாமலை பிறந்த நாளையொட்டி அவர் போட்டிருந்த டிவீட்டில், இது பாச அண்ணன் உருவாகும்…  து ஜென்ம ஜென்மத்தின் வரம் ஆகும். உன்மேல் நான் கொண்ட பாசம் அது கரை இல்லாத நேசம். என் அன்பு அண்ணனுக்கு   @annamalai_k  இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று போட்டிருந்தார் சூர்யா சிவா.

ஆனால் தற்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. ஜூலை 30ம் தேதியான இன்று அவர் அப்படியே அண்ணாமலைக்கு எதிராக திரும்பியுள்ளார். அண்ணாமலை தொடர்பான ஒரு ஊடகவியலாளர் போட்டிருந்த டிவீட்டை ரீடிவீட் செய்து, கூவுற காசுக்கு மேல கூவறாண்டா கொய்யாலே என்ற மீமைப் போட்டுள்ளார். அது எல்லாவற்றையும் விட அண்ணாமலை குறித்து  அவர் போட்டுள்ள டிவீட்தான் பரபரப்பை கிளப்பியுள்ளது.


அதில், கட்சியை விட்டு வெளியில் வந்தாலும் அண்ணாமலை பற்றி நான் விமர்சனம் செய்யாமல் தான் இருந்தேன். வாழ்க்கையில் ஒரு விஷயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நாம் உண்மையாக இருப்பதைவிட யாரிடம் உண்மையாக இருக்கிறோம் என்பது மிக முக்கியம். நாம் கொடுக்கும் முக்கியத்துவத்தை அவர்கள் முதலில் உணர வேண்டும். நான் அப்படிப்பட்ட ஒரு நபர் 
அண்ணாமலை என்று நினைத்தேன். ஆனால் அது பொய் என்று தெரிந்து விட்டது. கூடிய விரைவில் அவருடைய பொய் பிம்பம் உடையும் என்று கூறியுள்ளார் சூர்யா சிவா.

அண்ணாமலை மீது மிகுந்த பாசமாக இருந்து வந்த சூர்யா சிவா ஏன் இப்படி திடீரென்று அவர் மீது கோபத்தைக் கக்கியுள்ளார், அதிலும் "பொய்ப் பிம்பம்" என்று சொல்லும் அளவுக்கு கடுமையான கோபம் ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதற்கும் சூர்யாவே விரைவில் பதில் தருவார் என்று நம்பலாம்.

இது கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 17ம் தேதி திருச்சி சூர்யா சிவா போட்டிருந்த டிவீட் வீடியோ.. அதில் எப்படி பாசத்தைக் கொட்டித் தீர்த்திருந்தார் பாருங்கள்!

சமீபத்திய செய்திகள்

news

ஒரே சூரியன் .. ஒரே சந்திரன்.. ஒரே திமுக... பாட்ஷா ஸ்டைலில் அதிரடி காட்டிய முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் இடத்துக்கு நிச்சயமாக உதயநிதி வருவார்: துரைமுருகன் புகழாரம்!

news

இளைஞர்களை ரவுடிகளாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி...பிரதமர் கடும் குற்றச்சாட்டு

news

நடிகை கௌரி கிஷனின் உடல் எடை குறித்த கேள்வி... வருத்தம் தெரிவித்து யூடியூபர் வீடியோ வெளியீடு!

news

பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 1 முதல் ஆரம்பம்

news

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிலிருந்து.. வெளியேறுகிறாரா சஞ்சு சாம்சன்.. சிஎஸ்கேவுக்கு வருவாரா?

news

தமிழ்நாட்டில் இன்று 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை மையம் தகவல்!

news

மனித நேயமும் மாற்றுத்திறனாளிகளும்.. தன்னம்பிக்கையும், தைரியமும் அவர்களை வழி நடத்தும்!

news

வாரத்தின் இறுதி நாளான இன்று தங்கம் விலை எவ்வளவு தெரியுமா? இதோ முழு விலை நிலவரம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்