திமுகவுடன் இணைந்து மோடிக்கு எதிராக செயல்படும் இபிஎஸ்.. திருச்சி சூர்யா திடீர் புகார்

Apr 08, 2023,04:15 PM IST

சென்னை: திமுக ஐடி விங்குடன் இணைந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, பிரதமர் மோடிக்கு எதிராக கோபேக் மோடி டிரண்ட் செய்வதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் ஆதரவாளரான திருச்சி சூர்யா கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவில் இணைந்து செயல்பட்டு வந்தவர் திருச்சி சூர்யா. தீவிர அண்ணாமலை ஆதரவாளர். அண்ணாமலைதான் அடுத்த தமிழ்நாடு முதல்வர் என்று தொடர்ந்து கூறி வந்தவர், கூறியும் வருபவர். இந்த நிலையில் அவருக்கும் பாஜக பெண் பிரமுகர் டெய்சிக்கும் இடையே நடந்த மோதல், அதுதொடர்பான ஆடியோ ஆகியவை வெளியானதால் பெரும் சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். ஆனால் சூர்யா பாஜகவை விட்டு விலகுவதாக அறிவித்தார்.



பாஜகவின் மூத்த தலைவரான கேசவ விநாயகம் மீது குற்றம் சாட்டி விட்டு கட்சியை விட்டு விலகினார். இதனால் சலசலப்பும் ஏற்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து அண்ணாமலைக்கு ஆதரவான கருத்துக்களை வெளியிட்டு வரும் சூர்யா, இன்று முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை குற்றம் சாட்டி ஒரு டிவீட் போட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் போட்டுள்ள ட்வீட்டில், #Vanakkam_Modi தமிழ்நாட்டின் ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வெற்றி வேட்பாளரே.பாரதப் பிரதமர் அவர்களே வருக! வருக!  @EPSTamilNadu
நேரடியாக அண்ணன் அண்ணாமலை அவர்களிடம் மோத முடியாமல் திமுக ஐடி விங் உடன் இணைந்து  Gobackmodi என்று டிரெண்ட் செய்வது சரியா  @narendramodi @PMOIndia.

பாரத பிரதமர் அவர்கள் உணர்வார்கள். துரோகம் செய்வதை மட்டுமே வழக்கமாக வைத்திருக்கும் உங்களுக்கு அம்மையார் ஜெயலலிதாவுக்கு நீங்கள் செய்த துரோகத்திற்கும் சேர்த்து எங்கள் பாரதப் பிரதமர் அவர்கள் உங்களுக்கு பதிலடி கொடுப்பார் என்று கூறியுள்ளார் சூர்யா.

இந்த ட்வீட் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவினர் சூர்யாவை கடுமையாக விமர்சித்து பதில் அளித்து வருகின்றனர். சூர்யா ஏன் இப்படி டிவீட் போட்டார் என்று தெரியவில்லை. சமீப காலமாக எடப்பாடி பழனிச்சாமிக்கும், அண்ணாமலைக்கும் ஒத்துப் போகவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் தலைவர் பதவியிலிருந்து விலகுவேன் என்றும் அண்ணாமலை கூறியிருந்தார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

எடப்பாடி பழனிச்சாமியும் அண்ணாமலையை கண்டு கொள்வதில்லை. அதிமுக தரப்பும் அண்ணாமலையை மதிப்பதில்லை. நேரடியாக மேலிடத்துடன் பேச ஆரம்பித்து விட்டனர். இதெல்லாம் சேர்த்து அதிமுக - பாஜக இடையே புகைச்சலாக இருந்து வருகிறது. இந்த நிலையில்தான் தீவிர அண்ணாமலை ஆதரவாளரான சூர்யாவின் டிவீட் வந்துள்ளது. இதற்கு என்ன காரணம் என்ற விவாதம் தற்போது சூடு பிடித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

நடிப்பு சலித்துவிட்டால்.... பார்ஸிலோனாவில் ஊபர் டிரைவராகிவிடுவேன்: மனம் திறந்த நடிகர் பகத் பாசில்

news

நான் வெற்றி பெற்றவன்.. இமயம் தொட்டு விட்டவன்.. பகையை முட்டி விட்டவன்.. கமலுக்கு வைரமுத்து வாழ்த்து!

news

உழைப்பின் உயர்வு (கவிதை)

news

திமுக ஆட்சியின் போலீசுக்கே பாதுகாப்பு இல்லை... சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளது: எடப்பாடி பழனிச்சாமி

news

எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட சிறுமியை சீரழித்த கொடூரன்.. காப்பக உரிமையாளர் உள்பட 4 பேர் கைது

news

கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட் - வானிலை ஆய்வு மையம் தகவல்!

news

முதல்வரின் கோரிக்கை மனு...தமிழகம் வரும் பிரதமரிடம் வழங்க போவது யார் தெரியுமா?

news

தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டம்!

news

வைகோவால் மனஉளைச்சல்.. ஆகஸ்ட் 2ம் தேதி உண்ணாவிரதம்.. அறிவித்தார் மல்லை சத்யா

அதிகம் பார்க்கும் செய்திகள்