தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது.. தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்..!

Mar 05, 2025,05:37 PM IST

சென்னை:தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என அக்கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியுள்ளார்.


திமுக தலைவர் முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில், இன்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம், புதிய நீதி கட்சி ஆகிய ஐந்து கட்சிகள் மட்டும் பங்கு பெறவில்லை. அழைப்பு விடுக்கப்பட்ட மற்ற அனைத்து கட்சிகளும் கலந்துகொண்டு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் ஒருமனதாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதனை அனைத்துக் கட்சிகளும் முன்மொழிந்துள்ளன.


இந்த நிலையில் பல்வேறு கட்சிகள் அதன் நிலைப்பாடு குறித்து தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வரிசையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கலந்து கொண்ட அக்கட்சி பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கூறியதாவது, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் இங்கிருக்கும் அனைவருக்கும் வணக்கம். 




தொகுதி மறுசீரமைப்பு செய்வது தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட தென் மாநிலங்களை பெரும் பாதிப்பை உண்டாக்கும். இது ஒன்றிய அரசின் மக்கள் தொகை கட்டுப்பாட்டுத் திட்டத்தை கடைபிடிப்பதற்கான தண்டனையே அன்றி வேறில்லை. 


முன்னாள் பிரதமர் மாண்புமிகு இந்திரா காந்தி அம்மையார் 42வது சட்ட திருத்தத்தின் மூலம் 1976 இல் இருந்து 2001 வரை தொகுதி மறு சீரமைப்பை நிறுத்தி வைத்தார். அதேபோல் 84 ஆவது சட்ட திருத்தத்தின் மூலம் முன்னாள் பிரதமர் மாண்புமிகு வாஜ்பாய் அவர்கள் 2001 இல் இருந்து 2026 வரை மேலும் 25 ஆண்டுகளுக்கு இந்த மறுசீரமைப்பை நிறுத்தி வைத்தார். அப்போது அவர் சொன்ன காரணம் வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் மக்கள் தொகை குறைவாக இருப்பதால் தொகுதி மறுசீரமைப்பு செய்வது நியாயமாக இருக்காது என்பதே அந்த காரணம். இப்போதும் அப்படியே தான் இருக்கிறது. 


எனவே, தொகுதி மறு சீரமைப்பு தேவையற்றது. இப்போது இருக்கும் 543 என்ற எண்ணிக்கையிலேயே தொடர வேண்டும் என்பதே தமிழக வெற்றி கழகத்தின் நிலைப்பாடாகும் என கூறியுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

100 நாள் வேலைத் திட்டத்தில் வருகிறது அதிரடி மாற்றங்கள்.. மாநில அரசுகளுக்கு சுமை அதிகரிக்கும்!

news

அமித்ஷாவின் வியூகள் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது: வானதி சீனிவாசன்

news

மனதிற்கு இனிய கணவன் கிடைக்க அருளும் அதிஅற்புத நோன்பு. பாவை நோன்பு....!

news

மூல முதற் கடவுள்.. விநாயகருக்கு அப் பெயர் வரக் காரணம் என்ன.. தெரியுமா உங்களுக்கு?

news

கார்த்திகை சோமவார (கடைசி திங்கட்கிழமை) சங்காபிஷேகம்

news

சாட் ஜிபிடியிடம் பயனுள்ள கேள்விகளைக் கேளுங்கள்: முகேஷ் அம்பானி மாணவர்களுக்கு அறிவுரை!

news

Responsibility Beyond the Grades.. ஆங்கிலத்திலும் கவிதை படிப்போம்..!

news

தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் பியுஸ் கோயல் நியமனம்

news

ஆஸ்திரேலியா தாக்குதல் எதிரொலி.. இந்தியாவில் யூதர்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்