மழலைச் செல்வங்களுக்கு.. சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிடுவோம்.. விஜய் வாழ்த்து

Nov 14, 2024,02:43 PM IST

சென்னை: நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுதந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிய இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம் என தவெக தலைவர் விஜய் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.


ஒவ்வொரு வருடமும் நவம்பர் 14ஆம் தேதி குழந்தை தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்கலால் நேருவின் பிறந்த நாள் இன்று. ஜவர்கலால் நேரு குழந்தைகள் மீது அதிக பற்றும் அன்பும் கொண்டவர். கல்வி வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களையும் செயல்படுத்தியவர். அது மட்டுமல்லாமல் இன்றைய குழந்தைகள்  நாளைய எதிர்காலம் என்ற  நேருவின் கூற்றை அங்கீகரிக்கும் நோக்கில்  அன்னாரின் பிறந்த நாளை குழந்தைகள் தினமாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடப்படுகிறது . குழந்தைகளும் நேர் மீது அதிக பிரியம் கொண்டதால் அவரை செல்லமாக குழந்தைகள் நேரு மாமா என்றும் அழைத்து வந்தனர்.


நேருவின் மறைவிற்குப் பிறகு அவரை நினைவுகூரும் வகையில் ஒவ்வொரு வருடமும் குழந்தைகள் தினம் அனைத்து பள்ளிகளிலும் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் கட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இதற்கிடையே சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் தலைவர்களின் பிறந்தநாளுக்கும் அவ்வப்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவராக குரல் கொடுத்து வருகிறார். 




அந்த வகையில் இன்று குழந்தைகள் தினம்  என்பதால், விஜய் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த செய்தி குறிப்பு:


ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானது அவர்களின் புன்னகை விலைமதிப்பற்றது குழந்தைகளின் மனது பொறாமை, பழிவாங்குதல், ஏமாற்றுதல், போன்ற எந்த ஒரு தீய எண்ணத்தையும் கொண்டிராமல் தெளிந்த நீரை போல் பரிசுத்தமானது.


நமது எதிர்காலமான மழலைச் செல்வங்களுக்கு அடிப்படை உரிமைகளுடன் கூடிய சிறந்த சுகந்திரமான எதிர்காலத்தை உருவாக்கிட இந்த குழந்தைகள் தினத்தில் உறுதி ஏற்போம்..! குழந்தைகளை எந்நாளும் பாதுகாத்து போற்றும் மகிழ்வோம். குழந்தைகள் தின நல்வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

களை கட்டியது தவெக மாநில மாநாடு... சாலை மார்க்கமாக மதுரை வந்தடைந்தார் விஜய்!

news

பாஜக தேர்வு செய்த வேட்பாளர் தமிழர் என்பதாலேயே ஆதரிக்க முடியுமா?: திமுக எம்பி கனிமொழி!

news

சபாஷ் செம போட்டி.. துணை ஜனாதிபதி தேர்தலில்.. ஆப்பை அப்படியே பாஜக பக்கம் திருப்பி விட்ட காங்.!

news

ஆம்புலன்ஸ் செல்லும் வழியில் கூட்டத்தை போட்டுவிட்டு ஓட்டுனரை மிரட்டுவதா?: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

news

உப்பு அதிகம் சாப்பிட்டால் கிட்னி பாதிக்கப்படுமா.. மருத்துவர்கள் சொல்வது என்ன?

news

அன்புமணி பதிலளிக்க தவறினால் என்ன நடக்கும்?.. டாக்டர் ராமதாஸின் அடுத்தடுத்த அதிரடி!

news

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்: இந்தியா கூட்டணி வேட்பாளராக சுதர்சன் ரெட்டி தேர்வு!

news

சிறுநீரகக் கொள்ளை தீரும் முன்பே கல்லீரல் திருட்டு.. இது தான் திமுகவின் சாதனையா?: டாக்டர் அன்புமணி

news

மும்பையை உலுக்கி எடுத்த கன மழை.. நவி மும்பையின் பல பகுதிகளில் வெள்ளக்காடு!

அதிகம் பார்க்கும் செய்திகள்