தவெகவில் self discipline.. 100% முக்கியம்.. ஸ்ட்ரிக்டா பாலோ செய்யனும் ஃபிரண்ட்ஸ்..விஜய்!

Apr 30, 2025,12:24 PM IST

சென்னை: நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 

100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்…

அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்... இனிமேல் ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்புறேன் என தமிழக வெற்றிக் கழக தலைவர் ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.


 சமீபத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வாக்கு சாவடி முகவர்களின் கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நடிகர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்.இதில் லட்சக்கணக்கான தொண்டர்களும் ரசிகர்களும் கலந்து கொண்டனர்.அப்போது  விஜய் திறந்த வெளி வாகனத்தில் வரும் போது ரசிகர்கள் திடீரென குதிப்பது, வாகனத்தை வேகமாக பின் தொடர்வது போன்ற செயல்களில் ஈடுபட்டனர். இது தொடர்பான  வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தொண்டர்களுக்கும், ரசிகர்களுக்கும், கோரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது,




என் நெஞ்சில் குடியிருக்கும் என் உயிரினும் மேலான தோழர், தோழியர் அனைவருக்கும் வணக்கம்.


மூன்று தினங்களுக்கு முன், கோவையில் நடைபெற்ற நம் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச் சாவடி முகவர்களின் கருத்தரங்கில் கலந்துகொள்ள வந்த என்னை உங்கள் அளவு கடந்த அன்பால் நனைய வைத்தீர்கள்! I love you Kovai and Kongu Thangams.


நம் மீது இத்துணை அன்பைக் காட்டும் உங்களுக்கும் மக்களுக்கும், உண்மையான மக்களாட்சியையும் உண்மையான ஜனநாயக அதிகாரத்தையும் மீட்டுத் தருவதுதான் நாம் காட்டும் அன்புக் காணிக்கையாக இருக்கும். 2026 சட்டமன்றத் தேர்தல் வெற்றியால் இதை நிச்சயம் நிறைவேற்றிக் காட்டுவோம். 


இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தமிழகமெங்கும் உள்ள நம்முடைய இளம் தோழர்களுக்கு என்னுடைய அன்பு வேண்டுகோள்கள் சில உண்டு. அவை அன்புக் கட்டளைகளாகவும் இருக்கும் என்பதிலும் சந்தேகம் இல்லை.


நம்முடைய இளைய தோழர்கள், நமது வாகனங்களை இரு சக்கர வாகனங்களில் தலைக் கவசமின்றி வேகமாகப் பின்தொடருவது, பாதுகாப்புக் குழுவினரை மீறி வாகனத்தின் மீது ஏறுவது, குதிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டது எனக்கு மிகவும் கவலையை அளித்தன. 


அதனால இப்ப கொஞ்சம் உங்ககிட்ட மனசு விட்டு பர்சனலா பேச விரும்பறேன்…


நம்ம பயணத்தப்ப ஆம்புலன்ஸ் வந்ததும் அதுக்கு வழிய சரிபண்ணிவிட்ட உங்க செயல பாராட்டியே ஆகணும்…அதுதான் நீங்க…


இப்டில்லாம் செய்ற நீங்க, அன்பின் காரணமா செய்ற சிலதையும் சொல்லி ஆகணும்…

உங்களோட அன்ப புரிஞ்சுக்கறேன் ஃப்ரெண்ட்ஸ்…

அதுக்கு நான் தலைவணங்கவும் செய்யறேன்… 

ஆனா எப்பவுமே நம்மளோட அன்பை வெளிப்படுத்துற விதம், அதீதமாகவே இருந்தாலும் அது மத்தவங்களுக்கு முன்னுதாரணமாத்தான் இருக்கணும்…

எல்லாத்துக்கும் மேல உங்களோட பாதுகாப்புதான் எனக்கு ரொம்ப முக்கியம்…

நீங்கதான் எனக்கு precious…

இவ்ளோ அன்போட இருக்கிற நீங்க எனக்குக் கிடைச்சதுக்கு நான் என்ன தவம் செஞ்சேன்னு எனக்குத் தெரியல…

உங்கள நான் கை கூப்பித் தலைவணங்கிக் கேட்டுக்கிறதெல்லாம் ஒண்ணே ஒண்ணுதான்…

உங்க அன்ப நான் மதிக்கறேன்… இனி எப்பவும் மதிப்பேன்… அதேபோல நீங்களும் என்மேல அன்போட இருக்கறது உண்மைன்னா எப்பவும் இதுபோல இனி நீங்க செய்யவே கூடாது…

நான் இங்கே சொல்லி இருக்கற மாதிரி, இத நீங்க கட்டளையாகவோ கண்டிப்பாகவோ கூட எடுத்துக்கங்க…தப்பே இல்ல…


நம்ம அரசியல்ல கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டோட கண்டிப்பும் self discipline-ம் 

100% சமரசமற்றதாத்தான் இருக்கணும் ஃப்ரெண்ட்ஸ்…

அதுதான் நம்ம அரசியலுக்கும் நல்லதுன்னு உங்களுக்கே தெரியும்...


இனி அடுத்தடுத்து நம்ம மக்கள சந்திக்கிற நிகழ்ச்சிகளெல்லாம் இருக்கறதால

நான் சொல்றத நீங்க இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்வீங்கன்னு நம்பறேன்…

செய்வீங்க… செய்றீங்க…

ஓகே?...

Thank u friends….

Love you all… என பதிவிட்டுள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

அவல் பாயாசம் பண்ணுங்க.. தமிழ்நாட்டு ஸ்டைலில் ஆக்ஷயா திருதியையைக் கொண்டாடுங்கள்!

news

அட்சய திருதியை வந்தாலே தங்கம்தானே.. நகை வாங்க சென்னைதான் டாப்பாம்!

news

தவெகவில் self discipline.. 100% முக்கியம்.. ஸ்ட்ரிக்டா பாலோ செய்யனும் ஃபிரண்ட்ஸ்..விஜய்!

news

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகரன் நியமனம்.. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவிப்பு!

news

மோகம் தவிர்த்து மோட்சம் செல்ல வழிகாட்டும் நல்ல நாள்.. கொடுத்தும் பெறலாம்... அக்ஷய திரிதியை அன்று!

news

இந்து சமய அறநிலையத் துறை சார்பில்.. 70 வயது பூர்த்தி அடைந்த 100 தம்பதிகளை கௌரவிக்க திட்டம்!

news

கொல்கத்தாவில் பயங்கர தீ விபத்து.. 3 தமிழ்நாட்டவர் உள்பட 14 பேர் பலி!

news

வரப் போகுது அக்னி நட்சத்திரம்.. கத்திரி வெயிலிலிருந்து தப்பிப்பது எப்படி?.. சில டிப்ஸ்!

news

கள்ளச்சாராய ஆட்சி கள்ளக்குறிச்சியே சாட்சி.. எடப்பாடி பழனிச்சாமி தாக்கு.. ஆர்.எஸ்.பாரதி ஹாட் பதிலடி!

அதிகம் பார்க்கும் செய்திகள்