நடிகர் விஜய் இந்தியா கூட்டணியில் வந்து சேரலாம்.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை யோசனை!

Jan 18, 2025,08:06 PM IST

சென்னை: இந்துத்துவ சக்தியை அகற்ற தவெக தலைவர் விஜய் இந்தியா கூட்டணிக்கு வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை விஜய்க்கு அழைப்பு விடுத்துள்ளார்.


சென்னையில் மறைந்த காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் 86வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை  வாழப்பாடி ராமமூர்த்தியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில், மதவாத சக்திகள் தமிழகம் மட்டுமில்லாமல் இந்தியாவிலேயே இருக்க கூடாது என மிக தீவிரமாக களம் கண்டவர் வாழப்பாடி ராமமூர்த்தி. அவருடைய பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பங்கேற்பதில் மகிழ்ச்சி.அவரின் குரல் ஏழைகளின் குரலாக இருந்தது. எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவர். அவருக்கு மலரஞ்சலி செலுத்துவதில் காங்கிரஸ் கட்சி பெருமை கொள்கிறது.




பரந்தூர், ஏகனாபுரம் ஸ்ரீபெரும்புதூரான எனது தொகுதிக்குள் வருகிறது. மக்களுக்கு பாதிப்பில்லாமல் அரசின் திட்டத்தை நிறைவேற்றலாம் என்று சொல்லி இருக்கின்றேன். 3 ஆண்டுகளுக்கு முன்னர் சொன்ன இந்த திட்டம் அப்படியே தான் இருக்கிறது. ஒரு எம்எல்ஏவாக நானும் தமிழக அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்திருக்கிறேன். அங்கு வாழும் மக்களுக்கு எந்த பாதிப்பும் வந்துவிடக் கூடாது. அது தான் அனைவருடைய விருப்பமும். பல தலைமுறைகளாக வாழ்கின்ற அந்த மக்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். 


தவெக தலைவர் விஜய் நடத்திய மாநாட்டில் பேசியதின் படி, இந்துத்துவ மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்று முன்னெடுத்தால் அவர் இந்தியா கூட்டணிக்கு வருவது நல்லது. இது அவருக்கும் அவரின் கொள்கை கோட்பாடிற்கும் எல்லாவற்றிற்கும் நல்லது. இதை நான் யதார்த்தமாக நாட்டின் ஒரு பிரஜையாக சொல்கிறேன். 


ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் திமுக வேட்பாளரை ஆதரித்து விரைவில் காங்கிரஸ் நிர்வாகிகள் பிரச்சாரத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.


இந்தியா கூட்டணிக்கு விஜய் வர வேண்டும்  என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவரின் பேச்சிற்கு திமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று கட்சி தொண்டர்களிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2026 தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல்.. விஜய் வழி தனி வழி.. தெளிவா சொல்லிட்டாரு.. 4 முனைப் போட்டிதான்!

news

அரசியல் ஆலோசகர் பிரஷாத் கிஷோர் விலகலுக்கு.. விஜய்யின் அதிரடி அறிவிப்பே காரணமா?

news

கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான காலியிடங்களை நிரப்ப தடை போடுவது ஏன்? டாக்டர் அன்புமணி

news

தேர்தலுக்குத் தேர்தல்.. படிப்படியாக முன்னேறும் சீமான்.. 2026 தேர்தலில் யாருக்கெல்லாம் ஆப்பு?

news

என்னைப் பற்றி பேசுவதாக நினைத்துக்கொண்டு தன்னைப் பற்றி பேசுகிறார் முதலமைச்சர்: எடப்பாடி பழனிச்சாமி!

news

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு Z+ பாதுகாப்பு!

news

தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில்.. குஷ்பு, கெளதமி.. எந்தெந்த நடிகைகள் போட்டியிட சீட் கிடைக்கும்?

news

முருகனின் 2ம் படை வீடான.. திருச்செந்தூரில் ஜூலை 7 கும்பாபிஷேகம்.. போலீஸ் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

news

பாகிஸ்தானுக்கு பை பை சொல்கிறது மைக்ரோசாப்ட்.. ஊழியர்களைக் குறைத்து வந்த நிலையில் மூடு விழா!

அதிகம் பார்க்கும் செய்திகள்