சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் 2 வார காலத்திற்கு தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
நடிகரும், தவெக தலைவருமான விஜய் மக்கள் சந்திப்பு என்ற பெயரில் மக்களை சந்தித்து வந்தார். திருச்சியில் தொடங்கி அரியலூர், நாமக்கல் ஆகிய நகரங்களில் அவரது மக்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடந்தது. ஆனால் கரூரில் நடந்த சம்பவம் வரலாற்றில் மறக்க முடியாத நிகழ்வாக மாறி விட்டது.
கரூரில் அவர் கலந்து கொண்ட கூட்டத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக பலியானார்கள். பலர் காயமடைந்தனர். நாட்டையே உலுக்கிய சம்பவமாக இது மாறிப் போய் விட்டது.

இந்த சம்பவத்திற்குப் பிறகு சென்னை வந்து சேர்ந்த விஜய் வீட்டிலேயே இருந்து வருகிறார். தனது நீலாங்கரை வீட்டிலிருந்து பட்டினப்பாக்கம் இல்லத்திற்குப் போனார். பின்னர் மீண்டும் நீலாங்கரை வீட்டுக்குத் திரும்பி விட்டார். அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் நேற்று விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் இன்னும் தீவிரமாக அரசியலில் ஈடுபடுவேன் என்று அவர் தெரிவித்தார்.
இந்தப் பின்னணியில் தற்போது தவெக தலைமை நிலையம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
கழகத் தோழர்களுக்கு வணக்கம்.
நம் சொந்தங்களை இழந்த வேதனையிலும் வருத்தத்திலும் நாம் இருக்கும் இச்சூழலில், நம் கழகத் தலைவர் அவர்களின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை நம் கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக்கு வர விஜய்யிடம் காங்கிரஸ் வைத்த டிமாண்ட்...ஆடிப்போன தவெக
தவெக தேர்தல் அறிக்கை தயாரிக்க 12 பேர் கொண்ட குழு...பட்டியலை வெளியிட்ட விஜய்
வானுலகின் பேரொளியில், ஒரு பொக்கிஷம்.. Divine Gift!
மலை போல வந்ததா? மழை போல வந்ததா? .. ஒரு மொழித் தேடல்!
வேகம் விவேகமானதா..?
செம்மையாக வாழ வேண்டும்.. எப்படி தெரியுமா.. ஸ்டீபன் ஹாக்கிங் போல!
ஜனநாயகன் இழுபறி தொடர்கிறது.. பாரசக்திக்கு யுஏ கிடைத்தது.. திட்டமிட்டபடி நாளை ரிலீஸ்!
ஒவ்வொரு நாளும் ஒரு புதிய பாடம்!
மகாலட்சுமியின் வடிவம்.. பூமாதேவியின் அம்சம்..வராகி அம்மன் சிறப்புகள்!
{{comments.comment}}