சென்னை: யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர் என்று தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அம்பேத்கர் குறித்துக் கூறிய கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளன. பல்வேறு கட்சித் தலைவர்களும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நாடாளுமன்றமும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. இந்த நிலையில் நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவருமான விஜய்யும் அமித் ஷாவுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

யாரோ சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம். சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் இந்திய மக்கள் அனைவருக்கும் அவர்கள் உயரத்தில் வைத்துப் போற்றும் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை, அவர்.
அம்பேத்கர்...
அம்பேத்கர்... அம்பேத்கர்...
அவர் பெயரை
உள்ளமும் உதடுகளும் மகிழ
உச்சரித்துக்கொண்டே இருப்போம்.
எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. அண்ணலை அவமதித்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சரை, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார் விஜய்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்!
தமிழக காங்கிரஸ் கொஞ்சம் கொஞ்சமாக அழிவின் பாதையில் செல்கிறது: ஜோதிமணி எம்.பி.,
அச்சச்சோ.. ஆமாங்க இப்ப தாங்க வலிக்குது.. தங்கமே தங்கம்!
பராசக்திபட வெளியீட்டிற்கு தடை விதக்க மறுப்பு: சென்னை உயர்நீதிமன்றம்
ஜனநாயகன்: ஜனவரி 4 முதல் டிக்கெட் முன்பதிவு ஆரம்பம்
தமிழ்ப் படத்துக்கு தமிழ்நாட்டில் தியேட்டர்கள் இல்லை.. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி குமுறல்!
வைகோ நடைபயணம்... திருச்சியில் தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
கடந்த 4 நாட்கள் சரிவிற்கு பின்னர் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்வு..சவரனுக்கு ரூ.1,120 உயர்வு!
ஏறிக் கொண்ட போகும் தங்கம் விலை.. காரணம் என்ன.. இதுக்கு என்ட் கார்டே கிடையாதா?
{{comments.comment}}