சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஐந்து கொள்கைத் தலைவர்களுக்கும், பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் சிலை வைக்கப்பட்டுள்ளது. அந்த சிலைகளை விஜய் இன்று திறந்து வைத்தார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சி தொடங்கி ஒரு வருடமாகிறது. இன்று 2வது ஆண்டின் தொடக்கமாகும். இதையொட்டி கட்சியினருக்கு கடிதம் எழுதி அவர்களுக்கு உற்சாகமூட்டியுள்ளார் விஜய்.
இந்த நிலையில் பனையூரில் உள்ள தனது கட்சி தலைமை அலுவலக வளாகத்தில் கட்சியின் கொள்கைத் தலைவர்களான வீர மங்கை வேலு நாச்சியார், பெருந்தலைவர் காமராஜர், தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை இன்று நடந்த நிகழ்ச்சியில் விஜய் திறந்து வைத்து மலரஞ்சலி செலுத்தினார்.

விஜய் தற்போது பனையூர் அலுவலகத்திற்குக் கிட்டத்தட்ட தினசரி வருகிறார். கட்சியினருடன் ஆலோசனை நடத்துகிறார். நிர்வாகிகள் நியமனமும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனால் தொண்டர்கள் உற்சாகமாகியுள்ளனர்.
விஜய் கட்சி தொடங்கிய பின்னர் இதுவரை 2 வெளி நிகழ்ச்சிகளில் மட்டுமே கலந்து கொண்டுள்ளார். ஒன்று டாக்டர் அம்பேத்கர் குறித்த நூல் வெளியீட்டு விழா. அதைத் தொடர்ந்து பரந்தூர் போராட்டக் குழுவினரை நேரில் போய்ப் பார்த்தது. இந்த இரண்டு நிகழ்வுகளிலும் அவர் பேசிய பேச்சுக்கள் பேசு பொருளாகின.
அடுத்து தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய விஜய் தயாராகி வருவதாக தெரிகிறது. அதுதொடர்பான விரிவான திட்டத்தை தவெக விரைவில் அறிவிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
வாயில் வடை சுடும் அரசு இது அல்ல... சாதனை திட்டங்களை செயல்படுத்தி வரும் அரசு: முதல்வர் முக ஸ்டாலின்!
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு தமிழக அரசின் 8 திட்டங்கள் குறித்து அறிவிப்பு: முதல்வர் முக ஸ்டாலின்
பாமக.,வில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்...அன்புமணி அறிவிப்பு...என்ன செய்ய போகிறார் ராமதாஸ்?
ராஜ்ய சபா சீட் கொடுத்தால் மட்டுமே பேச்சுவார்த்தை: பிரேமலதா விஜயகாந்த் அதிரடி!
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கதை திருட்டு புகாரில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சம வேலைக்கு சம ஊதியம்: போராடிய ஆசிரியர்கள் மீது அடக்குமுறை: அண்ணாமலை கண்டனம்!
ஜனநாயகன் இசை வெளியீட்டுக்காக மலேசியா புறப்பட்டார் விஜய்
போராட்டத்தில் திடீர் பரபரப்பு... மயங்கி விழுந்த ஆசிரியை... பதற்றத்தில் போராட்டக் களம்!
கரை தேடி வந்து உயிர்களை உள்வாங்கிய தினம்...!
{{comments.comment}}