காசியில் சிக்கி தவித்த மாற்றுத்திறனாளி வீரர்கள்.. விமானத்தில் அழைத்து வர உதயநிதி ஸ்டாலின் உத்தரவு

Feb 20, 2025,10:26 AM IST

சென்னை: வாரணாசி  ரயில் நிலையத்தில் கும்பமேளாவுக்குச் செல்லும் கூட்டம் அதிகரித்ததால், முன்பதிவு செய்து இருந்தும் மாற்றுத்திறனாளி கிரிக்கெட் வீரர்கள் ரயிலில் ஏற முடியாமல்  தவித்துக் கொண்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விமான மூலம் சென்னைக்கு அழைத்து வர உத்தரவிட்டுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். 


வாரணாசியில் மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் போட்டி கடந்த 16, 17, 18, ஆகிய மூன்று தினங்களில் நடைபெற்றது. இந்த போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த ஏழு வீரர்கள் கலந்து கொண்டனர். போட்டியை முடித்துவிட்டு இருபதாம் தேதி நள்ளிரவு ஒரு மணி அளவில் கங்கா காவிரி எக்ஸ்பிரஸில் சென்னை செல்வதற்காக முன்பதிவு செய்திருந்தனர். ஆனால், வாரணாசி ரயில்வே நிலையத்தில் கும்பமேளாவுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் அளவுக்கு அதிகமாக இருந்ததால் ஏசி பெட்டிகளையும் கும்பமேளா பயணிகள் ஆக்கிரமித்திருந்தனர். 




இதனால், முன்பதிவு செய்து இருந்தும் தமிழக மாற்றுத்திறனாளி வீரர்கள் விளையாட்டு உபகரணங்களுடன் ரயிலில் ஏற முடியவில்லை. இதனால் தமிழ்நாடு திரும்ப முடியாமல் மாற்றுத்திறனாளி வீரர்கள் வாரணாசி ரயில் நிலையங்களிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.இதனைதொடர்ந்து தமிழக அரசு எங்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 


இந்த நிலையில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாரணாசியில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மாற்று திறனாளி கிரிக்கெட் வீரர்களை விமான மூலம் சென்னை அழைத்து வர உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின் படி, தமிழ்நாட்டு விளையாட்டு வீரர் மேம்பாட்டு ஆணையம் சார்பில் தக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

வீரத்தின் விளை நிலம் எங்கள் பாரதியே....!

news

ஆட்டுக்கொட்டகையில் பிறந்து வளர்ந்து.. கொடூரனுக்கு எதிராக கொதித்தெழுந்த பெத்தனாட்சி!

news

சுப்ரியா சாகு அவர்களுக்கு ஐ.நா. விருது.. தமிழ்நாடு பெருமை கொள்கிறது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

நாமும் உணரும் திறனும்.. (Our sensitivity)

news

தொடர் உயர்வில் தங்கம் விலை... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்... இன்றைய விலை நிலவரம் இதோ

news

சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் பணிகள்.. டிசம்பர் 15 முதல் அஇஅதிமுக விருப்பமனு!

news

சுடச் சுட.. சுவையான நெய் சாதம் ரெடி.. குழந்தைகளே வாருங்கள் ருசிக்கலாம்!

news

தொழுதேத்தும் பத்மநாபன்.. யாதவ குல திலகன்.. மதுசூதனன் மாயன்!

news

தமிழன் என்றாலே வீரம்.. அந்த வீரத் திமிருக்கு சொந்தக்காரன்.. முறுக்கு மீசைக்காரன் பாரதியார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்