- உமாராணி சங்கரலிங்கம்.
அருட்பெருஞ்ஜோதி.
ஓம் நமசிவாய.
திருச்சிற்றம்பலம்.
ஜூலை 7,2022.
வியாழக்கிழமை.
அமர்நாத்தில் இரவு முழுவதும் தங்கியிருந்தோம். கனவா,நனவா இது எண்ணிக் கொண்டு சல சல எனப் பக்கத்தில் ஓடிக் கொண்டிருந்த நீரோடை சத்தத்தில் 4 மணிக்கு முழித்து 5 மணிக்குக் கிளம்பினோம். விடிந்தும் விடியாத நிலை. வெளியே வந்து நின்று அமரநாத ஈசனை நோக்கி எங்களோடு கூட வந்து எப்பொழுதும் எங்களை வழி நடத்த வேண்டும் எனக் கையெடுத்துக் கும்பிட்டு அனைவரும் சேர்ந்து ஒரு போட்டோ எடுத்துக் கொண்டோம். அந்நேரமே லங்காவில் டீ கொடுத்துக் கொண்டிருந்தார்கள். மற்ற எல்லோரும் டீ குடித்தார்கள்.

பின் கிளம்பி குதிரைகள் இருக்கும் இடத்திற்கு வந்தோம். 16 கி.மீ தூரத்தில் உள்ள பால்டால் இடத்திற்கு போவதற்கு எல்லோரும் குதிரையில் ஏறிக்கொண்டு ஓம் நமசிவாய மந்திரத்தை யும் பின் காப்புப் பாடலையும் பாடி கிளம்பினோம். மலை இறக்கமாக இருந்தது. ஓரிடத்தில் சிறு மலை ஏற வேண்டி இருந்தது.முதல் நாள் மழை பெய்ததால் பாதை மிகவும் வழுக்கலாக இருந்தது. குதிரையில் ஏறுவது கஷ்டம் என எங்களை நட்க்கச் சொல்லி விட்டனர். ஏறி விட்டு திரும்ப குதிரையில் ஏறி ஓரிடத்தில் கடைகளாக இருந்தன.
குதிரைக் காரர்களுக்கு டீ ,பன் வாங்கிக் கொடுத்து விட்டு நாங்களும் டீ,பால் குடித்தோம். பாவம் எங்கள் குதிரைக் காரர்களுக்கு மிகுந்த பசி போல. 3 டீ, 3 பன் சாப்பிட்டார்கள். என் குதிரையின் பெயர் பாதல். குதிரைக்காரனின் பெயர் ஷேஸாரு. குதிரைக்கும் சாப்பாடு கொடுத்தார்கள்.

திரும்பவும் குதிரையில் ஏறி அழகான இயற்கைக் காட்சிகளை ரசித்துக் கொண்டே வந்தோம். சிறு சிறு அருவிகள், சிறு பாலங்கள் எல்லாவற்றையும் கடந்தோம். வரும் வழியில் ஜவான்கள் வெந்நீர் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். வரும் வழியில் எல்லாம் மக்கள் ஏறிக் கொண்டும் டோலியில் சென்று கொண்டும் இருந்தனர். கீழே இறங்கியதும் முதலில் டூமால் (dumail) என்ற இடம் வந்தது.
பகல்ஹாமில் இருந்து வரும்போது சந்தன்வாடி வருமே அதைப் போன்று base camp டீமால் இடம். இங்கு நமது blue idஐக் கேட்கிறார்கள். என் id மட்டும் கழுத்தில் இருந்தது. கொடுத்து விட்டோம். பின் சுமார் ஒன்றரை கி.மீ தூரத்தில் இருந்த பால்டால் என்ற இடத்திற்கு சுமார் 9.30 மணிக்கு எல்லோரும் வந்து விட்டோம். அங்கிருந்த லங்காவில் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து எங்கள் shoeகளை கழுவினோம். அதைக் கழுவி polish போட ஆட்கள் இருக்கிறார்கள். அதற்குள் அங்கே எங்களுக்காக காத்திருந்த bus இல் 12மணிக்கு ஏறி விட்டோம். அங்கிருந்து நேராக ஸ்ரீநகருக்குச் சென்றோம்.

போகும் வழியில் டீ,பால் குடித்தோம். சுமார் 3மணிக்கு ஸ்ரீநகரை அடைந்தோம். சரியான வெயில். நம் ஊரைப் போல்தான் இருந்தது. Gull என்ற hotelஇல் bag களை வைத்து விட்டு lunch சாப்பிட்டு பின் 5 மணிக்கு டால் lake க்குச் சென்றோம். டால் லேக்கில் தண்ணீர் அதிகமில்லை. Boat இல் சென்றோம். தண்ணீரும் கறுப்பாகத் தான் இருக்கிறது. நிறைய போட்டில் கடைகள் தான் இருக்கின்றன. காஷ்மீர் பைல்ஸ் படத்தில் வரும் boat house இருக்கின்றன. Night light போட்டபிறகு தான் லேக் நன்றாக உள்ளது.
ஒரு round அடித்து விட்டு வந்து எதிரே இருந்த amusement park க்குச் சென்று ring game விளையாடி வெற்றி பெற்றோம். பின் காஷ்மீர் shawls, sarees வாங்கினோம். வெளியே வந்து குல்பி ஐஸ் சாப்பிட்டோம். பின் ஒரு hotelஇல் சாப்பிட்டு room க்கு வந்தோம். அனைவருக்கும் மிகுந்த அலுப்பு. படுத்து விட்டோம்.

(பயணங்கள் முடிவதில்லை)
(உமாராணி சங்கரலிங்கம், யோகா முத்ரா பயிற்சியாளர், மன உளவியலாளர்)
ADMK to TVK: தவெக நோக்கி படையெடுக்கும் அதிமுகவினர்.. முதல்வர் விஜய் திட்டம்தான் என்ன?
CM Vijay Returns to Chennai: ராகுலை சந்திக்காமல்.. சென்னை புறப்பட்ட முதல்வர் விஜய்.. என்ன காரணம்?
Karnataka Power Trasnsition: கர்நாடக முதல்வர் சித்தராமையா ராஜினாமா.. முதல்வராகும் டி.கே.சிவகுமார்
டொனால்ட் டிரம்ப் முகஜாடையில் உள்ள எருமை மாடு.. பக்ரீத் குர்பானியிலிருந்து விலக்கு!
கருப்பு நிற தண்ணீர்.. திரில்லான தால் ஏரி படகுப் பயணம்.. (அமர்நாத் யாத்திரை அனுபவங்கள்- 10)
Sasikala Viswanathan: காதல் பார்வை.. காமம் இல்லை.. நிலவு சிரிக்கிறது.. துளிப் பாக்கள்!
உணவு பழக்கமும் பழமொழிகளும்.. சூப்பர் காய்.. பாகற்காய்.. கசந்தாலும் உடம்புக்கு நல்லது!
சோனியா, ராகுல் காந்தியை சந்திக்கும் திட்டத்தை ரத்து செய்தார் முதல்வர் சி. ஜோசப் விஜய்!
The Sacrifices of a Mother.. ஒரு தாயின் தியாகம்!
{{comments.comment}}