ஆமதாபாத்: இது வெறும் டிரெய்லர் தான். ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் புஜ் விமானப்படை தளத்தில் விமானப்படை வீரர்களை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேரில் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், நேற்று ஸ்ரீநகர் சென்று ராணுவ வீரர்களைச் சந்தித்து பேசினேன். இன்று விமானப்படை வீரர்களுடன் பேசுகின்றேன். இன்று இங்கு இருப்பதில் நான் பெருமைப்படுகிறேன் . உங்களின் தைரியத்திற்கு தலைவணங்குகிறேன்.
1965ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரன நமது வெற்றிக்கு புஜ் விமானப்படைத் தளம் சாட்சியாக இருந்தது. இன்று மீண்டும் பாகிஸ்தானுக்கு எதிரான நமது வெற்றிக்கு சாட்சியாக உள்ளது. ஆபரேஷன் சிந்தூரின் போது நீங்கள் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் உள்ள இந்தியர்களும் பெருமைப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் வளர்க்கப்படும் பயங்கரவாதத்தை முறியடிக்க இந்திய விமானப்படைக்கு வெறும் 23 நிமிடங்கள் மட்டுமே போதுமாதாக இருந்தது.

மீண்டும் பயங்கரவாதத்தை பாகிஸ்தான் வளர்க்கத் தொடங்கிவிட்டது. பாகிஸ்தான் அணு ஆயுதங்கள், பயங்கரவாத அமைப்புகளின் கையில் செல்ல வாய்ப்புள்ளது. இனிமேல் பாகிஸ்தானுக்கு நிதி வழங்குவது குறித்து சர்வதேச நிதி ஆணையம் ஒரு முறை யோசிக்க வேண்டும்.
ஆபரேஷன் சிந்தூர் இன்னமும் முடிவடையவில்லை நீங்கள் பார்த்த ஆபரேஷன் சிந்தூர் வெறும் ட்ரைலர்தான். சரியான நேரம் வரும் போது அவர்களுக்குத் தேவைப்பட்டால் முழு படத்தையும் நாம் இந்த உலகிற்கு காட்டுவோம். பாகிஸ்தான் இப்போது சோதனைக் காலத்தில் இருக்கிறது என்று பேசியுள்ளார்.
எழுத்தறிவித்த இறைவர்களுக்கு நன்றி பகரும் நன்னாள் இந்நாள்!
இடர்பாடுகள்
ஆசிரியர் எனும் அகல்விளக்கு!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
“Teaching: A Gift from God”
தாணுமாலயன் (இயற்கையை போதிக்கும் ஆசான்)
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
{{comments.comment}}