திருவனந்தபுரம்: மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார். பாஜகவின் புதிய ராஜ்யசபா உறுப்பினரான சி.சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சரவையில் தனக்கு பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஆரம்பத்திலிருந்தே அமைச்சர் பதவியில் விருப்பம் இல்லாமல்தான் இருக்கிறார் சுரேஷ் கோபி. அமைச்சராக பொறுப்பேற்ற சில நாட்களிலேயே அவர் பதவி விலக விருப்பம் தெரிவித்தார். இதனால் சலசலப்பு ஏற்பட்டது. இப்போது மீண்டும் பதவி விலக விருப்பம் தெரிவித்துள்ளார் சுரேஷ் கோபி.
ஞாயிற்றுக்கிழமை அன்று கண்ணூரில் கட்சி தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், சதானந்தன் மாஸ்டரின் ராஜ்யசபா நியமனம் வடக்கு கண்ணூர் மாவட்ட அரசியலில் ஒரு முக்கிய திருப்புமுனை என்று குறிப்பிட்டார். நான் மனப்பூர்வமாக சொல்கிறேன், என்னை நீக்கிவிட்டு சதானந்தன் மாஸ்டரை (மத்திய) அமைச்சராக்க வேண்டும். இது கேரளாவின் அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என்று நான் நம்புகிறேன் என்று அவர் கூறினார்.

பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சராக இருக்கும் சுரேஷ் கோபி, சதானந்தன் மாஸ்டரின் எம்.பி. அலுவலகம் விரைவில் அமைச்சர் அலுவலகமாக தரம் உயர்த்தப்பட வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்தார். சுரேஷ் கோபி மேலும் பேசுகையில், நான் கட்சியில் அக்டோபர் 2016 இல் சேர்ந்ததாகவும், மாநிலத்திலேயே இளைய பாஜக உறுப்பினர்களில் ஒருவர் என்றும் கூறினார். லோக்சபா தேர்தலில் மக்கள் அளித்த ஆதரவுக்கு அங்கீகாரமாக கட்சி தன்னை மத்திய அமைச்சராக்கியிருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
எனது திரைப்பட வாழ்க்கையை விட்டுக்கொடுத்து நான் ஒருபோதும் அமைச்சராக விரும்பவில்லை. சமீப காலமாக எனது வருமானம் கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் சுரேஷ் கோபி தெரிவித்தார்.
தமிழ்நாட்டு மக்களின் ஒரே சின்னம் விசில்.. தவெகவுக்கு முதல் வெற்றி.. விசில் போடுவோம் - விஜய்
திருச்சி, பெரம்பலூர்உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் கொடுத்த தகவல்
விசில் கொடுத்தாச்சு.. கப்பு முக்கியம் பிகிலு.. மாமல்லபுரத்தில் ஆலோசனை.. ஆயத்தமாகும் விஜய்!
திமுக ஆட்சியில் கஞ்சா மயமான தமிழ்நாடு.. பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தாக்கு!
NDA கூட்டணியைப் பார்த்து செல்வப்பெருந்தகைக்கு குளிர் ஜூரம் ஏற்பட்டுள்ளது: அண்ணாமலை
2026 தேர்தலுக்கான விசில் ஒலித்தது-தவெக சின்னம் குறித்து பிரவீன் சக்ரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு!
திருப்பூரில் பரபரப்பு... கவிஞர் வைரமுத்து பங்கேற்ற நிகழ்ச்சியில் காலணி வீச்சு
தவெகவுக்கு விசில் சின்னம்: தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு!
மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் ஆட்சி..தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி: எடப்பாடி பழனிச்சாமி திட்டவட்டம்
{{comments.comment}}