மும்பை : பாலிவுட் நடிகை ஊர்மிளா மடோன்கர் தனது கணவர் மோக்சின் அக்தர் மிரிடம் இருந்து விவகாரத்து பெற்றுத் தரும்படி கோர்ட்டை அணுகியுள்ளார். இது பாலிவுட் வட்டாரத்தில் புதிய பரபரப்பை கிளப்பி உள்ளது.
பிரபல பாலிவுட் நடிகையும், பாலிவுட் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியுமாக இருந்தவர் ஊர்மிளா. ரங்கிலா படத்தின் மூலம் பாலிவுட் மட்டுமின்றி மற்ற மொழி சினிமா ரசிகர்களின் மனதையும் கவர்ந்தவர் ஊர்மிளா. இவர் தமிழில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் படத்திலும் நடித்துள்ளார். இவர் 2016ம் ஆண்டு மோக்சினை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது விவகாரத்து கோரி உள்ளார்.

ஊர்மிளா தனது கணவரை பிரிய முடிவு எடுத்ததற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது வரை அவர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடவில்லை. அதே சமயம் விவகாரத்து பெறுவதற்கான சட்ட நடவடிக்கைகள் துவங்கப்பட்டு, மும்பை கோர்ட்டில் விவாகரத்து மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
நன்கு யோசித்து, ஆலோசித்த பிறகே ஊர்மிளா இந்த முடிவை எடுத்ததாகவும், அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏதும் இல்லை என்றும் சொல்லப்படுகிறது. பரஸ்பர அடிப்படையில் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே ஊர்மிளா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கணவர் தொடர்பான போட்டோக்களை பகிர்வதை நிறுத்தி விட்டார். கடைசியாக அவர் 2023ம் ஆண்டு ரம்ஜானுக்கு தான் தனது கணவருடன் இருக்கும் போட்டோக்களை பகிர்ந்து இருந்தார்.
மோக்சின், காஷ்மீரை சேர்ந்த தொழிலதிபர். இவர் பிரபல மாடலும் கூட. இவரும் ஊர்மிளாவும் முதல் முறையாக 2014ம் ஆண்டு டிசைனர் மணிஷ் மல்கோத்ராவின் உறவினர் வீட்டு திருமணத்தில் தான் சந்தித்து கொண்டனர். அதற்கு பிறகு நெருக்கமாக பழகி வந்த இருவரும் 2016ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் முதலில் இஸ்லாமிய முறைப்படியும், பிறகு அமிர்தசரஸ் பொற்கோவிலில் சீக்கிய முறைப்படியும் நடைபெற்றது.
மோக்சின் சில படங்களிலும் நடித்துள்ளார். பிறகு சினிமாவில் இருந்து விலகி, தொழிலில் கவனம் செலுத்த துவங்கினார். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஊர்மிளா திவாரி என்ற வெப்சீரிசில் நடித்து வருகிறார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அவார்டுகளைக் குறி வைக்கும் சூப்பர் மேன்.. தீவிரப் பிரச்சாரத்தில் குதித்த வார்னர் பிரதர்ஸ்
மரத்தை வைத்தவன் தண்ணீர் ஊற்றுவானா?
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் அக்டோபர் 25, 2025... இன்று ஆனந்தம் தேடி வரும் ராசிகள்
அக்.27ஆம் தேதி உருவாகிறது மொந்தா புயல்... அலெர்ட் கொடுத்த இந்திய வானிலை மையம்!
கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட்: சென்னை வானிலை மையம்!
23 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்!
வங்காளக் கடலில்.. புதிதாக ஒரு காற்றழுத்தத் தாழ்வு.. மீண்டும் வரும் மழை நாட்கள்
அம்மாவை 'அம்மா' என்று கூறுவதற்கு நீயே காரணம் என் உயிர் தமிழே!
ஆந்திராவில் பேருந்து விபத்து... குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல்!
{{comments.comment}}