வாஷிங்டன்: அமெரிக்காவில் அளவுக்கு அதிகமாக இன்சுலின் ஊசி போட்டு பல நோயாளிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நர்ஸுக்கு 380 முதல் 760 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த நர்ஸின் செயலால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். பலருக்கு உடல் ரீதியாக பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023 வரை இந்த கொடூரச் செயலில் இந்த நர்ஸ் ஈடுபட்டுள்ளார். இவரது பெயர் ஹெதர் பிரஸ்டீ. 41 வயதான இவர் பென்சில்வேனியாவைச் சேர்ந்த நர்ஸ் ஆவார். இவர் மீதான புகார்களைத் தொடர்ந்து ஹெதர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகள் தொடரப்பட்டன. அதில், 3 கொலை வழக்குகள், 19 கொலை முயற்சி வழக்குகளில் இவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 22 நோயாளிகளுக்கு இவர் அளவுக்கு அதிகமாக இன்சுலின் போட்டார் என்பது பொதுவான குற்றச்சாட்டாகும். இரவு நேர ஷிப்ட்டில் பணியில் இருந்தபோது இந்த செயலை அவர் செய்துள்ளார். இவரால் அதீத அளவில் இன்சுலின் போடப்பட்ட நோயாளிகளில் சிலர் உடனடியாக இறறந்துள்ளனர். சிலர் உயிருக்குப் போராடி இறந்துள்ளனர். இறந்தவர்கள் அனைவரும் 43 முதல் 104 வயது உடையவர்கள் ஆவர்.
இன்சுலினை அளவுக்கு அதிகமாக போட்டால் என்னாகும்?
அளவுக்கு அதிகமாக இன்சுலின் எடுத்துக் கொண்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு வெகு வேகமாக குறைந்து போய் விடும். இதனால் லோ சுகர் ஏற்பட்டு பெரும் பாதிப்பு ஏற்படும். இதயத்துடிப்பும் தாறுமாறாக அதிகரிக்கும். இதனால் மாரடைப்பும், இதய செயலிழப்பும் ஏற்பட்டு மரணம் சம்பவிக்கும்.
சம்பந்தப்பட்ட நர்ஸ் மன ரீதியாக மனிதர்களை வெறுப்பவராக இருந்துள்ளார். குறிப்பாக நோயாளிகளை வெறுப்பவராக இருந்துள்ளார். தனது தாயாருக்கு இவர் பலமுறை எஸ்எம்எஸ் அனுப்பியுள்ளாராம். அதில், எனக்கு நோயாளிகளைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. அப்படியே கொன்று விட வேண்டும் என்று தோன்றுகிறது. இவர்கள் எல்லாம் இருந்து என்ன சாதிக்கப் போகிறார்கள் என்று கூறியுள்ளார் ஹெதர்.
தனது சக ஊழியர்களிடமும் கூட இதே போலவே அவர் பேசி வந்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கும் புகார் போயுள்ளதாம். இந்த பெண் குறித்து பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்ப உறுப்பினர் கூறுகையில் இவர் மன ரீதியாக பாதிக்கப்பட்டவர் கிடையாது. பிசாசுக் குணம் நிரம்பியவராக இருந்திருக்கிறார். அவரது முகத்தில் நான் சாத்தானைப் பார்த்தேன். எனது தந்தையை கொடூரமாக கொன்று விட்டார் என்று குமுறியுள்ளார்.
நோயாளிகளை நர்ஸ் ஒருவர் கொல்வது அமெரிக்காவில் இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு நியூ ஜெர்சியில், சார்ல் குல்லன் என்ற ஆண் நர்ஸ், 29 நோயாளிகளைக் கொன்று சிக்கினார். அதேபோல டெக்ஸாஸைச் சேர்ந்த வில்லியம் டேவிஸ் என்ற ஆண் நர்ஸ், நான்கு நோயாளிகளுக்கு அவர்களது ரத்த நாளத்தில் காற்றை செலுத்தி கொலை செய்து கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!
இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி
மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு
கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)
ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்
{{comments.comment}}