காணாமல் போன கணவரின் உடலை 8 மாதங்களுக்கு பிறகு கண்டுபிடித்த பெண்

Mar 09, 2023,04:13 PM IST
வாஷிங்டன் : அமெரிக்காவில் 53 வயதான பெண் ஒருவர் கிட்டதட்ட 8 மாதங்களுக்கு பிறகு, காணாமல் போன தனது கணவரின் உடலை சடலமாக கண்டுபிடித்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

அமெரிக்காவின் இல்லினோயிஸ் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு மேயிட்ஞ். இவரது மனைவி ஜெனிபர். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தனது மனைவிக்கு போன் செய்த ரிச்சர்டு, வேலை முடிந்து விட்டதாகவும், தான் சீக்கிரமே வீட்டிற்கு வந்து விடுவதாகவும் போனில் தெரிவித்துள்ளார். அதற்கு பிறகு ரிச்சர்டிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. 

அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என எந்த தகவலும் இல்லை. ரிச்சர்டின் கார் நிறுத்தப்பட்ட இடம் உள்ளிட்ட பல இடங்களில் போலீசார் தேடியும் ரிச்சர்ட் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது வீட்டை அலங்கரித்து வந்துள்ளார் ஜெனிபர். அப்போது வீட்டின் படிக்கட்டுகளுக்கு கீழுள்ள தேவையற்ற துணிகள் போட்டு வைக்கப்பட்டிருந்த அலமாரியை சுத்தம் செய்த போது அந்த அலமாரிக்கு பின்புறம் ரிச்சர்டின் உடல் இருப்பதை ஜெனிபர் கண்டுபிடித்துள்ளார்.



இது பற்றி ஜெனிபர் கூறுகையில், கிறிஸ்துமஸ் மரம் வைத்து, அதில் அலங்கார பொருட்களை தொங்க விட நினைத்து, இந்த இடத்தை சுத்தம் செய்த போது அவரின் உடல், கிட்டதட்ட மம்மி நிலையில் கண்டுபிடித்தேன். அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பல மாதங்களாக அவர் கிடைக்காததால் இந்த ஆண்டு ஜனவரி மாதமே எனது குடும்பத்தினர் அவருக்கு இறுதிச்சடங்குகள் செய்து முடித்து விட்டனர். போலீசார் தேடிய போது இந்த இடத்தை மட்டும் எப்படியோ தவற விட்டு விட்டனர் என்றார்.

ரிச்சர்டு தற்கொலை தான் செய்து கொண்டுள்ளார் என போலீசாரும் உறுதி செய்துள்ளனர். போலீசார் தேடிய போது துர்நாற்றம் அடித்ததை சாக்கடை நாற்றம் என அவர் அலட்சியமாக விட்டுள்ளனர். இங்கு துணிகள் அதிக அளவில் போட்டு வைக்கப்பட்டதால் பெரிய அளவில் துர்நாற்றம் வெளியே வராமல் இருந்துள்ளதாகவும் போலீசார் தெரிடித்துள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

Tamil Life Qoutes: தெரிந்து கொள்வதை விட புரிந்து கொண்டால் .. அன்பு ஆயுள் வரை நீடிக்கும்.!

news

Tamil Short story: இருளில் ஓர் இதயம்!

news

லீவு முடிஞ்சாச்சு.. பள்ளிக்கூடம் திறந்தாச்சு.. உற்சாகமாக திரண்டு வந்த மாணவ, மாணவியர்!

news

என் மகனுக்கு TVK என பெயர் வைப்பேன்.. தவெக எம்எல்ஏ எம்.ஆர்.பல்லவி அதிரடி!

news

விண்ணுலகமே வியந்து போகும்.. அற்புதமாக நடந்தேறிய.. வரதராஜ பெருமாள் திருத்தேர் உற்சவம்

news

தர்ஷனின் தரமான சம்பவங்கள்.. அஞ்சாப்பு அட்டகாசங்கள்!

news

World Bicycle day: ஓரம்போ ஓரம்போ.. இன்னும் சைக்கிள் ஓட்டுபவரா நீங்க.. வாழ்த்துகள்ங்க!

news

Tamil Short story: குழூஉக்குறி.. ஒரு நிமிடக் கதை (13)

news

World Bicyle day: சிக்கு..‌‌ சிக்கு மிதிவண்டி.. சின்னப் பையன் மிதிவண்டி!

அதிகம் பார்க்கும் செய்திகள்