நியூயார்க்: உலகின் அதிவேக மனிதராக ஒரு காலத்தில் அறியப்பட்ட உசைன் போல்ட், இப்போது அமைதியான ஓய்வு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். அவர் தனது மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொண்டு ஜாலியான குடும்பஸ்தராக மாறியிருக்கிறார்.
நிறைய திரைப்படங்கள் பார்க்கிறாராம். வீட்டோடு இருந்து மகிழ்ச்சியான தனது நாட்களைக் கழித்து வருகிறாராம் உசேன் போல்ட். 2017-ல் தீவிர ஓட்டப்பந்தயத்தில் இருந்து விலகிய பிறகு, எட்டு முறை ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவரான போல்ட், இப்போது ஓடுவதில்லை என்று கூறுகிறார். தனது உடற்பயிற்சி குறைந்துவிட்டதாகவும், மாடிப்படிகளில் ஏறுவது கூட சவாலாக இருப்பதாகவும் கூறுகிறார்.
எப்போதும் ஓடிக் கொண்டிருந்து விட்டு, திடீரென ஓடுவதை நிறுத்துவதால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் நிபுணர்கள் விளக்குகிறார்கள். ஓட்டப்பயிற்சியை மீண்டும் தொடங்குமாறும் உசன் போல்ட்டுக்கு அவர்கள் அறிவுரை கூறியுள்ளனராம். அப்படிச் செய்வதன் மூலம் மீண்டும் பழைய நிலையை அடைய முடியுமாம்.
இதற்கிடையே, உசைன் போல்ட் ஒரு பேட்டியில் கூறும்போது, பொதுவாக, நான் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் நேரத்தில் தான் எழுந்திருப்பேன். பிறகு அன்றைய வேலைகளை பார்ப்பேன். வேலை இல்லை என்றால், சும்மா chill பண்ணுவேன். சில நேரங்களில் நல்ல mood இருந்தால், workout செய்வேன். இப்போது சில series பார்த்து chill பண்ணுகிறேன். குழந்தைகள் வந்தவுடன் அவர்களுடன் நேரம் செலவிடுவேன். அவர்கள் என்னை irritate செய்யும் வரை அவர்களுடன் இருப்பேன். பிறகு அங்கிருந்து வந்துவிடுவேன். அதன் பிறகு வீட்டில் movies பார்ப்பேன். இப்போது LEGO விளையாட்டுகளில் ஆர்வம் வந்துள்ளது. அதனால் அதை செய்வேன் என்று கூறியுள்ளார்.
ஓடுவதை நிறுத்தும் போது உடலில் என்ன நடக்கும்?
உடற்பயிற்சிக்காக தொடர்ந்து ஓடும் நபர்களுக்கு, அது அவர்களின் உடலுக்கு எவ்வளவு முக்கியம் என்று தெரியும். ஓடுவது ஒரு high-intensity exercise. இது இதய மற்றும் நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கலோரிகளை எரித்து உடல் எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. எலும்புகள் மற்றும் தசைகளை வலுப்படுத்துகிறது. மன நலனையும் மேம்படுத்துகிறது.
ஓடுவதை நிறுத்தினால் என்ன நடக்கும்?
உடலை recharge செய்ய சில நாட்கள் ஓய்வு தேவை. ஆனால், நீண்ட கால இடைவெளி உடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒரு வாரம் ஓடுவதை நிறுத்தினால், உடலின் fitness level குறைய ஆரம்பிக்கும். இரத்த plasma அளவு குறைவதால், cardiac output குறையும். இதனால் தசைகளுக்கு oxygen கலந்த இரத்தம் குறைவாக செல்லும்.
காலப்போக்கில், தசைகள் சுருங்கி விரியும் திறன் குறையும். இதனால் சில நாட்கள் கழித்து ஓடும்போது ஒரு மாதிரி 'rusty' ஆன உணர்வு ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
பயிற்சி செய்யாததால் ஏற்படும் விளைவுகளை குறைக்க எளிய வழிகள்:
பயப்பட வேண்டாம். கொஞ்சம் முயற்சி மற்றும் ஊக்கத்துடன் முன்பு இருந்த fitness level-க்கு எப்போதும் திரும்ப முடியும். அதற்கு சில வழிகள் உள்ளன:
Active recovery:
ஓடுவதை தவிர, walking போன்ற calorie எரிக்கக்கூடிய workouts செய்யலாம். Cycling மற்றும் swimming ஆகியவை உடல் செயல்பாட்டை பராமரிக்க சிறந்த வழிகள்.
உங்கள் pattern-ஐ maintain செய்யுங்கள்:
மீண்டும் rhythm-க்கு திரும்புவது கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால், கொஞ்சம் முயற்சி செய்தால் முடியும். ஒரு break எடுத்துவிட்டு மீண்டும் ஓட்டப்பயிற்சிக்கு திரும்புவது சவாலாக இருக்கலாம். ஆனால், எப்போதும் உங்கள் pattern-ஐ maintain செய்யுங்கள்.
Warm-ups செய்யுங்கள்:
ஓட ஆரம்பிக்கும் முன் warming-up exercises செய்யுங்கள். இது தசைகளை stretch செய்ய உதவும். ஓடுவதற்கு warm-up செய்ய, 5-10 நிமிடங்கள் brisk walking அல்லது slow jog போன்ற light activity செய்யுங்கள். இது இதய துடிப்பை படிப்படியாக அதிகரிக்கும். தசைகளை warm-up செய்யும். warm-up செய்வது காயத்தின் அபாயத்தையும் குறைக்கிறது.
Slowவாக intensity-ஐ build செய்யுங்கள்:
ஒவ்வொரு நாளும் தூரம் மற்றும் நேரத்தை அதிகரிப்பதன் மூலம் intensity-ஐ build செய்யுங்கள். 10 நிமிடங்கள் ஓடலாம் அல்லது cross-train செய்யலாம்.
பிரதமர் மோடியின் 75 ஆவது பிறந்தநாள் - ஜனாதிபதி முர்மு உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!
கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க ஆசை.. பிளான் இருக்கு.. கன்பர்ம் செய்தார் ரஜினிகாந்த்
உயர்வில் நேற்று இருந்த தங்கம் இன்று குறைவு... எவ்வளவு குறைவு தெரியுமா?
திமுக முப்பெரும் விழா.. கோலாகல விழாக் கோலத்தில் கோடங்கிப்பட்டி.. களை கட்டிய கரூர்!
உசேன் போல்ட்.. என்னா வேகமா ஓடிட்டிருந்தாரு.. இப்ப என்ன பண்ணிட்டிருக்காரு பாருங்க!
இனப்பகையை சுட்டெரிக்கும் பெரு நெருப்பு.. அவர் நம் பெரியார்.. மு.க.ஸ்டாலின், இ.பி.எஸ். புகழாரம்!
பிரதமர் நரேந்திர மோடிக்கு பரிசாக வந்த 1300 பொருட்கள்.. ஆன்லைனில் ஏலம்.. இன்று முதல் அக். 2 வரை
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் செப்டம்பர் 17, 2025... இன்று பணம் தாராளமாக வரும்
Diwali Special trains: பயணிகளின் கனிவான கவனத்திற்கு.. தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல்!
{{comments.comment}}